சென்னை மே 04, 2022

அவசர அவசரமாக கிளம்பிச் செல்லவேண்டுமா ? கூப்பிடு ஆட்டோவை எனும் வாக்கு உண்மையே. நீண்ட சாலையாக இருப்பினும் குறுகிய தெருவாக இருப்பினும் சடுதியில் புகுந்து புறப்படுவது மஞ்சள் வண்ணத்தில் மிளிரும் மூன்று சக்கர வாகனம் ஆட்டோ.

தினம் உயரும் பெட்ரோல் டீசல் கட்டணங்கள் வாகன எரிவாயு விலை உயர்வு என சமாளிக்க கடினமாக இருக்கும் இந்த காலகட்டங்களில் எல்லாவற்றையும் சமாளித்து தமது வாழ்க்கையை நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களின் உரிமையை அரசின் அமைப்பு சாரா வாரியங்களின் மூலம் கொடுக்கப்படும் சலுகைகளை கேட்டுப் பெற கூட்டாக ஒற்றுமையுடன் இருத்தலே சிறந்த வழி. இதில் பல கட்சிகளின் சார்பு மற்றும் அதன் உறுப்பு அமைப்பாக தொழிற்சங்கங்கள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் துவக்கப்பட்ட தலைமை தொழிற்சங்கமான “நம்மவர் தொழிற்சங்க பேரவை“. அதன் புதிய உறுப்பு சங்கமாக இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மய்யம் தலைமை அலுவலகத்தில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களால் பெருமிதத்துடன் இனிதே துவக்கப்பட்டது “நம்மவர் ஆட்டோ தொழிற்சங்கம்“.

இன்று தலைவர் அவர்களால் துவக்கப்பட்ட நம்மவர் ஆட்டோ தொழிற்சங்கம் அதன் மாநில தலைவராக திரு ச.சரவணகுமார் (Mobile: 98407 95555) மற்றும் மாநில பொதுச்செயலாளர் ஆக திரு L. விஜயன் (Mobile: 90945 95813) ஆகிய இருவரும் வழிநடத்திச் செல்வர். மேலும் பலர் பொறுப்புகள் ஏற்றதும் அதனை அறிவிப்பார்கள் என தெரியவருகிறது.

புதிதாக துவக்கப்பட்ட சங்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள தங்களின் மேம்பட்ட வாழ்வாதாரங்களை பெற்றிட இச்சங்கத்தில் இணைந்து பணியாற்றிட வேண்டும் எனில் அதற்கு உண்டான அடையாளச் சான்றுகளுடன் மேற்கண்ட தலைவர் மற்றும் பொதுசெயலாளர் ஆகிய இருவரையும் தொடர்புகொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இணைத்து செய்யல்பட

ஊர் கூடி தேர் இழுத்தால் வாழ்வும் வளமாகும் நாளை நமதாகும். புதிய தொழிற்சங்கத்திற்கு மய்யதமிழர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.