விருது நகர் ஜூன் 22, 2022

நற்பணி என்றால் சளைக்காமல் செய்வது நம்மவர் கமல் ஹாசன் நற்பணி இயக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்தது முதல் இன்னும் பல வகைகளில் மக்களுக்காக தொடர்ந்து நற்பணிகள் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது.

அதைப் பறைச் சாற்றும் விதமாக தானத்தில் சிறந்தது இரத்த தானம் அதையும் எந்த சுணக்கமும் அயற்சியும் கொள்ளாமல் இன்முகத்தோடு தேவையான காலங்களில் உயிர் காக்கும் செங்குருதியை தந்து கொண்டே இருக்கிறார்கள்.

இதை உணர்ந்து தான் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் இரத்த தானம் செய்வது தொடர்பாக எந்தத் தடையும் தாமதமும் இன்றி விரைவாக தேவைப்படும் பொதுமக்களுக்கு சேவை புரிந்திட கமல் பிளட் கம்யூனி எனும் இரத்தம் பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யும் பிரிவை கட்சி அலுவலகத்தில் கடந்த 14 ஆம் தேதி அன்று தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இதையும் உணர்ந்து கொண்ட வெள்ளை உள்ளம் கொண்ட நமது மய்யம் உறவு இதுநாள்வரை அதிகமுறை இரத்த தானம் செய்ததை பாராட்டி விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் திரு மேகநாத ரெட்டி அவர்கள்.

நமது மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் திரு.A. நாகேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.ராஜலக்ஷ்மி மற்றும் நகர பிரதிநிதி திரு.G ராஜ்குமார் ஆகியோருக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டி கௌரவித்தார்.

குருதிக் கொடையாளர் மூவருக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பாக மய்யத்தமிழர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.