சென்னை ஜூன் 28, 2022

2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் தமிழக அரசின் ஒப்புதலை கோரி சுமார் 7 மாதங்கள் ஆகியும் அனுமதி தராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன் ?

https://www.dailythanthi.com/News/State/why-hesitate-to-take-action-against-those-who-were-complicit-in-the-abuse-mnk-question-732237

https://www.dinamani.com/tamilnadu/2022/jun/27/makkal-needhi-maiam-question-on-velumani-tender-case-3869859.html

https://tamil.oneindia.com/news/chennai/makkal-needhi-maiam-leader-kamal-haasan-questions-dmk-government-464045.html

https://tamil.asianetnews.com/tamilnadu/makkal-needhi-maiyam-has-said-that-there-has-been-an-irregularity-in-the-tendering-of-corporation-works-in-tamil-nadu-in-which-ias-officers-have-been-involved-re4nbv

தமிழக அரசியலில் ஊழலை ஒழித்து நேர்மையை அதில் வளரும் நிர்வாகத்தை அமைக்க மக்கள் நீதி மய்யம் தன்னிகரற்ற ஓர் அரசியல் கட்சியாக உருவெடுத்து வளர்ந்து வருகிறது. ஓட்டுக்கு பணம் கிடையாது, எந்த இலவசங்களும் கிடையாது, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஸ்கூட்டர் போன்ற விலையற்ற இலவசப் பொருட்கள் கிடையாது அதனால் அவசியமற்ற வழிகளில் அரசின் நிதிகள் மடைமாற்றம் செய்யப்படக் கூடாது எனும் மிக முக்கிய குறிக்கோளுடன் களம் இறங்கிய மய்யம் 5 ஆவது வருடமாக மக்களின் தேவைக்கு சேவைகளை செய்து வருகிறதும் அனைவரும் அறிந்ததே.

நீதியும் நேர்மையும் நியாமும் ஓர் அரசியல் கட்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதன் தலைமை அப்பழுக்கற்ற கறை படியாத கரங்கள் ஆக இருத்தல் வேண்டும். தமிழகத்தின் தலைசிறந்த திரைக்கலைஞரான திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் செயல்படும் மக்கள் நீதி மய்யம் அசைக்க முடியாத கட்சியாக விளங்கி வருகிறது. அதன் முக்கிய கொள்கையே முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் ஒழிக்கப்படவேண்டும் என்பதே.

இதற்கு முந்தைய அரசான அதிமுகவின் முக்கிய அமைச்சராக வளம் வந்தவர்கள் பலர் அதில் முக்கிய ஆளுமைகளாக இருந்தவர்கள் உடன் இணைந்து ஐ.எ.எஸ் அதிகாரிகளும் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார்களும் அதன் மீத வழக்குகள் பதிவதில் ஏன் இன்னும் இப்பொது ஆளும் திமுக அரசு மெத்தனம் காண்பிக்கிறது என்று கேள்வி எழுப்பிய மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருவதாவது.

“முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன்? சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி, 7 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்றும்

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்”. என்றும் தமிழக அரசினை கேட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்.