நாகர்கோவில் ஜூன் 27, 2022

கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்கள் இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவ்வேளையில் நாகர்கோயில் மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றபடாத பணிகளை செய்து தரும்படி கோரிக்கைகள் அடங்கிய மனுவை உயர்திரு மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்துள்ளார் உடன் மாநில இணைச் செயலாளர் திரு ஜெய்கணேஷ் மற்றும் நாகர்கோயில் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

“நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைப்பதை தடுக்க கோரியும், மாநகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டியும், பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வலம்புரி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய கோரியும் கன்னியாகுமரி மாவட்டச் ஆட்சியரிடம் மனு கொடுத்தோம்”.