ஈரோடு ஜூன் 07, 2022

எதை எல்லாம் வியாபாரமாக்கலாம் என்று யோசித்துச் செய்வது இன்று எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மட்டுமே பூர்த்தியான ஓர் சிறுமியை பல ஆண்டுகளாக அக்குழந்தையின் கருமுட்டைகளை எடுக்கப் பயன்படுத்தி அவற்றை பல தனியார் மருத்துவமனைகளில் விற்று சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது கடும் கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரிய செயலாகும். தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் கூட கருமுட்டைகளை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

எண்ணிப் பார்க்கவே அச்சம் தருகின்ற இந்தக் கொடுஞ்செயல் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டுவருவது மிகுந்த அதிர்ச்சியை பெரும் துயரத்தையும் தருகிறது.

தமிழகத்தில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனைகள் குறிப்பாக மகப்பேறுக்காக தனிப்பட்ட முறையில் செயல்படும் மருத்துவமனைகளை தொடர்ந்து கண்காணிப்பது இத்தகைய கொடுஞ்செயலை இன்னும் பலர் வணிகமாக்கிவிட கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வினை உண்டாக்கும்.

இத்தகைய ஈனச்செயலை செய்துவந்த கயவர்களை மேற்கொண்டு தீர விசாரித்து இதில் மேலும் பலர் சிண்டிகேட் வைத்து ஈடுபட்டுள்ளனரா என மிகக்கடுமையான சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் இதில் பாதிப்பிற்குள்ளான அந்தச் சிறுமியை தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்து சிகிச்சையும் அளிக்கும்படியும் தகுந்த இழப்பீட்டினையும் அளிக்குமாறும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.

https://www.thequint.com/south-india/16-year-minor-girl-forced-sell-oocytes-hospitals-tamil-nadu-erode-egg-donor-rape-abuse

Source : Internet Pic