மதுரை ஜூன் 24, 2022

நீட் தேர்வு சில மாநிலங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதை வைத்து அரசியல் செய்த கட்சிகள் திமுக அதிமுக என இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது கண் கூடாகவே தெரிந்த ஒன்று.

ஆளும் மத்திய பிஜேபி அரசு நீட் தேர்வு உத்தரவை எதிர்த்து தடை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தடை வாங்கிய மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 2016 இல் இயற்கை எய்தினார். அதற்கு பின்னர் அதிமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2021 இல் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்ட திமுக அளித்த வாக்குறுதிகளில் தனது முக்கிய அஸ்திரமாக கையில் எடுத்துக் கொண்ட நீட் தேர்வு ரத்து எனும் வாக்குறுதி தமிழகம் முழுக்க ஒலிக்கவே அதனாலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

பின்னர் உங்களுக்கு தெரியும் என்ன ஆச்சு என்று இன்னமும் அதாவது அதே பாடலை பாடிக் கொண்டே இருக்கிறார்கள். தீர்மானம் போட்டு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் முடிவெடுக்க அனுப்பி வைத்திருக்கறார்கள்.

நீட் தேர்வினால் ஏற்படும் மாற்றங்கள் இழப்புகள் மற்றும் சிக்கல்கள் என பல முரண்கள் இருந்தாலும் தற்போதைக்கு நீட் தேர்வு பங்கு பெற்றே ஆக வேண்டும். மேலும் மக்கள் நீதி மய்யம் நீட் தேர்வு ரத்து செய்யப் படவேண்டும் என்பதே தனது நிலைப்பாடாக கொண்டுள்ளது.

எனவே இதைக் காரணம் காட்டி மாணவர்களின் எதிர்கால நலனும் அவர்களின் நம்பிக்கையை குலைத்து விடாமல் வரப்போகும் கல்வியாண்டு 2023 இல் இலக்கு வைத்து முற்றிலும் இலவசமாக நீட் தேர்வு பயிற்சியை அளிக்கிறது.

முதல்கட்டமாக மதுரை கிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மூலம் சிறப்பான சேவையை வழங்க முன்வரும் அமைப்பு மக்கள் நீதி மய்யம் UK & EU நண்பர்கள் முன்னெடுப்பில் துவங்க உள்ளது. இது குறித்து மதுரை பகுதிகளில் ம.நீ.ம கட்சியினர் மூலம் பொதுமக்கள் அறியும் வண்ணம் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

எந்த நேரங்களையும் வீணடிக்காமல் செய்வன திருந்தச் செய் என்பதாக கல்வி புகட்டுதலை துவக்கும் மக்கள் நீதி மய்யம் UK & EU நண்பர்களை மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளை உளமார பாராட்டுகிறது மய்யத்தமிழர்கள்.