சென்னை ஜூன்-28, 2022

ராமாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த திருமலை நகர் வாழ் குடியிருப்புவாசிகள் தங்கள் வாழ்வாதாரமான வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நமது மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் தென்மேற்கு (பூவிருந்தவல்லி-மதுரவாயல்) மாவட்டச் செயலாளர் திரு பாசில் அவர்கள் என்றைக்கும் மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் முன்னின்று தமது கருத்துக்களை அழுந்தப் பதிவு செய்யும் சமூக செயற்பாட்டாளர். மேலும் கட்சியின் துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர் ஆக சிறப்பாக பணியாற்றி வரும் இவர் தலைவரின் அன்பான சொல்லுக்கு இசைந்து கடந்த 2021 ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளாராக நெஞ்சில் துணிவுடன் வழுவாத நேர்மையுடன் இரண்டு பெரிய கழகங்களுக்கு இணையாக போட்டியிட்டார். வெற்றி வாய்ப்பை விலை கொடுத்து வாங்கிவிட்டனர் என்றாலும் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை பம்பரம் போல் சுற்றிச்சுழன்று முழக்கமிட்டார்.

இப்போதும் சற்றும் சளைக்காமல் சோர்ந்து விடாமல் தலைவரின் கொள்கையும், அவருடைய மிகச்சிறந்த எண்ணமான சாத்தியம் என்பது சொல் அல்ல செயல் என்பதையும் தான் பொறுபேற்றுள்ள மாவட்டச் செயலாளர் பதவிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தம் அரசியல் பணியை செய்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது.

அப்படி மக்களுக்கான அரசியலில் மக்களுக்காக மக்களுடன் இயைந்து நிற்கும் திரு பாசில் அவர்கள் மேற்கண்ட திருமலை நகர் குடிவாசிகளிடம் இப்பிரச்சினை கேட்டுணர்ந்து அதில் உள்ள நியாயத்தை கண்டுணர்ந்து தன்னை அப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டு கோரிக்கைகளை தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் கொள்ளும்படி தம் குரலும் அதன் ஸ்திரத்தன்மையை உணர்த்தும் கோரிக்கைகளை முன்வைத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

நீண்ட நெடுங்காலமாக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்களிக்க வரும்போது மட்டும் நாவில் தேன் தடவியபடி பேசிச் செயல்வார்கள் பின்னர் கிணற்றில் போட்ட கல்லாக அவர்களின் வருகையும் வாக்குறுதி தந்த திட்டங்களும் அமிழ்ந்தே போகும்.

ராமாபுரம், திருமலை நகர் வாசிகளின் வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு விரைவில் வீட்டு மனைப் பட்டா வழங்கிட போராடும் பொதுமக்களுடன் இணைந்து போராடும் திரு பாசில் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது மய்யதமிழர்கள்.

விரைவில் அப்பகுதி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது மக்கள் நீதி மய்யம் – மய்யத்தமிழர்கள்.