சென்னை- ஜூலை 18, 2022

தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டு இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு சடடப் பிரிவு 243 ஜி குறிப்பிடுகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியல் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவார். அரசாங்கத்தின் பொது உத்தரவுகளுக்கு உட்பட்டு, கிராம சபைக் கூட்டம் ஒரு ஆண்டில் இரண்டு முறையாவது நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டம் குறிப்பாக இந்திய விடுதலை நாள் மற்றும் குடியரசு நாட்களின் போது கிராம ஊராட்சித் தலைவரால் கூட்டப்படும். தவறினால் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரியால் அதிகாரியால் நடத்தப்படும்.

இதனைப் பற்றிய விரிவான அலசல் பதிவு நீங்கள் கீழ் காண்பது.

THE TAMIL NADU URBAN LOCAL BODIES (WARD COMMITTEE AND AREA SABHA) RULES, 2022.

தமிழ்நாடு நகர உள்ளாட்சி (வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை) விதிகள் 2022

பகுதி 1

முன்னுரை:

 1. இவ்விதிகள் தமிழ்நாடு நகர உள்ளாட்சி (வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை) விதிகள் 2022 என்று அழைக்கப்படும்.
 2. இவை 24 ஜூன் 2022 முதல் அமலுக்கு வருகின்றன.

விளக்கம்: (அ) பல்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட நகர உள்ளாட்சிகள் சட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது (1919, 1971..2022) (ஆ) “ஏரியா சபை” என்பது, விதி 8ன் கீழ் வரையறுக்கப்பட்ட வார்டின் ஒரு பகுதியைக் குறிக்கிறது (இ) “கவுன்சில்(council)” என்பது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் மக்களால் தேர் ந்தெடுக்கப்பட்டவர்கள் நிறைந்த சபையைக் குறிக்கிறது (ஈ) “செயல் அலுவலர்” என்பது கவுன்சில் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்தும் அதிகாரி

(2) இந்த விதிகளில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான விளக்கம் அந்தந்த விதிகளிலேயே இருக்கும், அப்படி வரையறுக்கப்படாத சொற்களுக்கு மேற்கூறிய (அ) சட்டங்களில் இருக்கும் அர்த்தங்களை கொண்டவை.

பகுதி 2

3. வார்டு குழுவின் அமைப்பு : (1) விதி 8ல் கூறப்பட்டுள்ளது போல, ஒரு வார்டில் எத்தனை ஏரியாக்கள் உள்ளனவோ, அத்தனை உறுப்பினர்கள் அந்த வார்டு குழுவில் இருக்க வேண்டும். (2) ஒவ்வொரு ஏரியாவிலிருந்தும் ஒவ்வொரு உறுப்பினரை கவுன்சில் பரிந்துரைக்கும். (3) வார்டின் பிரதிநிதியான, வார்டின் கவுன்சிலர் (மன்ற உறுப்பினர்) அந்த வார்டு குழுவிற்கு தலைவர் (chairperson) ஆவார்.

4. வார்டு குழு உறுப்பினரின் தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் : வார்டு கவுன்சிலராக மற்றும் கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், பணி புரிவதற்கும், இந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளையே, வார்டு குழு உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், பணி புரிவதற்கும் வேண்டிய மாறுதல்களுடன் பொருத்திக்கொள்ளலாம்.

5. வார்டு குழு உறுப்பினரை பரிந்துரைப்பது :

 • வார்டின், ஒவ்வொரு ஏரியாவின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுள் ஒருவரை கவுன்சில், வார்டு குழு உறுப்பினராக பரிந்துரைக்க வேண்டும்.
 • இந்த பரிந்துரையின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்டவரிடமிருந்து செயல்படுத்தும் அதிகாரி படிவம் 1ல் ஒப்புதல் பெற வேண்டும்.
 • பிறகு, அவர்களின் விவரங்களை செயல்படுத்தும் அதிகாரி சரி பார்க்க வேண்டும்.
 • அடுத்த சந்திப்பில் கவுன்சிலின் உறுதிப்படுத்துதலுக்காக தகுதி பெற்றவர்களின் பட்டியல் அவர்களின் முன் வைக்கப்பட வேண்டும்.
 • கவுன்சில் உறுதிப்படுத்தியதும், பரிந்துரைப்பிற்கான உறுதி ஆவணத்தை (declaration of nomination) செயல்படுத்தும் அதிகாரி பரிந்துரைக்கப்பட்டோரிடம் இருந்து படிவம் 2ல் வழங்க வேண்டும்.
 • தகுதியற்றவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், செயல்படுத்தும் அதிகாரி அதனை கவுன்சிலிடம் தெரிவித்து, அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பரிந்துரைக்கக் கோர வேண்டும். புதிதான பரிந்துரை வந்த பின்பு, அவருடைய தகுதி மற்றும் விவரங்களை சரி பார்த்த பின் பு, அடுத்த சந்திப்பில் தகுதி பெற்றவர்களின் பட்டியலை கவுன்சிலின் முன் வைக்க வேண்டும்.

6. வார்டு குழு சந்திப்புகள் :

 • வார்டு குழு தலைவர், வார்டு குழு கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
 • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்திப்புகள் நடைபெற வேண்டும்.
 • அனைத்து சந்திப்புகளும், வார்டு குழு தலைவர் தலைமையில் நடைபெற வேண்டும்.
 • சந்திப்பு நடக்க குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை:
table 1.jpg

7. வார்டு குழுவின் உரிமைகள் மற்றும் கடமைகள் :

 • வார்டு குழு, பகுதிக்கான பரிந்துரைகளையும், திட்டங்களையும் கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 • வார்டு குழு, மக்களின் குடிமை வசதிகளில் உள்ள குறைகளை எடுத்துரைக்கவும் மற்றும் அதற்கான தீர்வுகளையும் கவுன்சிலிடம் பரிந்துரைக்கலாம்.
 • மாநகராட்சி அல்லது நகராட்சி, கவுன்சில் செயல்படுத்தும் அதிகாரியால் கொடுக்கப்பட்ட செயல்பாடுகளை வார்டு குழு செயல்படுத்தலாம்.

பகுதி 3

ஏரியா சபை

8. ஏரியா சபை – ஒவ்வொரு நகராட்சி வார்டும் கீழ்கண்டவாறு ஏரியாக்களாக பிரிக்கப்பட வேண்டும் table 2.jpg குறிப்பிட்ட பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் ஏரியா சபையின் எண்ணிக்கையை மாற்றும் அதிகாரம் அரசுக்கு உண்டு

9. ஏரியாக்களை தீர்மானித்தல் (1) சென்னை மாநகராட்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஒவ்வொரு வார்டையும், ஏரியாக்களாக வரையறுத்து அவற்றின் எல்லைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசிதழில் தெரிவுபடுத்த வேண்டும். அதே போல மற்ற பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்ந்த கவுன்சில் செயல் அதிகாரிகள், உரிய மாவட்ட ஆட்சியருடன், கலந்து ஆலோசித்து, ஏரியா சபைக்கான எல்லையை வரையறுத்து, மாவட்ட ஆட்சியர் மூலம் அரசிதழில் தெரிவுபடுத்த வேண்டும்

(2) அவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதி, தகுந்தவாறு ‘எண்’ இடப்படவேண்டும்.

(3) அவ்வாறு ஒருமுறை அறிவிக்கப்பட்ட ஏரியாவின் எல்லை வரையறை, வார்டின் எல்லைகள் மாற்றப்படும் வரை அமலில் இருக்கும்.

(4) வார்டின் எல்லைகள், மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அந்த ஏரியாசபையின் எல்லைகளை மாற்றி அமைக்கலாம்.

10. ஏரியா சபை சந்திப்புகள் :

 • ஏரியா சபைத் தலைவர், ஏரியா சபை கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
 • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்திப்புகள் நடை பெறவேண்டும்.
 • சந்திப்பு நடக்க குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை
table 3.jpg
 • அனைத்து சந்திப்புகளும் ஏரியா சபைத் தலைவர் தலைமையில் நடைபெற வேண்டும்.

11. ஏரியா சபையின் உரிமைகள் மற்றும் கடமைகள் :

 • ஏரியா சபை, பகுதிக்கான பரிந்துரைகளையும் திட்டங்களையும் கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 • ஏரியா சபை, மக்களின் குடிமை வசதிகளில் உள்ள குறைகளை எடுத்துரைக்கவும் மற்றும் அதற்கான தீர்வுகளையும் கவுன்சிலிடம் பரிந்துரைக்கலாம்.
 • மாநகராட்சி அல்லது நகராட்சி, கவுன்சில் செயல்படுத்தும் அதிகாரியால் கொடுக்கப்பட்ட செயல்பாடுகளை ஏரியா சபை செயல்படுத்தலாம்.

12. சந்திப்பில் பங்கு பெற கட்டணம் : வார்டு கமிட்டி அல்லது ஏரியா சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கட்டணம் எதுவும் வழங்கப்படாது.

குறிப்பு: தமிழ்நாடு நகர உள்ளாட்சி (வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை) விதிகள் 2022 – பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ‘அறப்போர் இயக்க தன்னார்வலர்கள்’ கொண்டு உருவாக்கப்பட்டது, எனவே ஏதெனும் கருத்துக்கள் இருப்பின் [email protected] க்கு மின் அஞ்சல் செய்க.

https://arappor.org/blog/blog/post/tamil-nadu-urban-local-bodies-ward-committee-and-area-sabha-rules-2022

நன்றி : அறப்போர் இயக்கம்