ஆத்தூர், ஜூலை 30, 2022

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 45) மேல்மருவத்தூர் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் ஓங்குர் பாலம் கட்டப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டுமானம் சேதம் அடைந்து அதன் இணைப்புப் பகுதி கான்கிரீட் கலவை பெயர்ந்து விட்டதாக தெரிகிறது அதனால் அந்த கட்டுமானம் பெயர்ந்த பாலம் ஒவ்வொரு முறையும் எந்த வாகனங்கள் சென்று வரும்போது மேலும் கீழுமாக ஆடுகிறது.

சென்னையிலிருந்து புறப்படும் கனரக வாகனங்கள் உட்பட எதுவாக இருந்தாலும் அவ்வழியே தான் தமிழகத்தின் தென் மாவட்டங்களுககு சென்றாக வேண்டும்.

ஒவ்வொரு நாளும் மிகுந்த கவலையுடன் உற்று நோக்கும் உள்ளூர்வாசிகள். பெரும் விபரீதங்கள் நடக்கும் முன்னரே சம்பந்தபட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றது மக்கள் நீதி மய்யம்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட அரசு நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.