சென்னை ஜூலை 18, 2022

திமுக அரசு அமைந்தால் மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் அமலாக்கப்படும் இதுதாங்க திமுக 2021 இல் தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று.

மின்வெட்டு இருக்காது அப்படியே மின்வெட்டுகள் இருந்தாலும் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிக்கப்படும் பொழுது மட்டுமே மின்தடைகள் இருக்கக்கூடும் அதையும் அறிவிப்பின் கீழ் தான் செயல்படுத்துவார்கள்.

அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன இதற்கு முன்னால் ஒரு நாள் இது போன்ற முன் வெட்டுக்களுக்கு காரணமாக அணில் மின்சார கேபிள்களின் மீது ஓடி வருவதால் இன்று ஓர் தகவலைச் சொன்னார் தமிழக மின்சாரத் துறை அமைச்சர். அது பெரும் வகையில் மீம்கள் ஆனது ஒரு விஷயம். ஆனால் இதுவரை மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை இன்னும் அமல்படுத்தவில்லை.

இன்றைக்கு மின் கட்டணங்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் சற்றே உயர்த்தப்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அவர் கூறும் காரணம் யாவது மின்சாரத் துறைக்கு வழங்கும் மானியம் தரப்பட மாட்டாது மாநில அரசு மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் அப்படி உயர்த்தினால் மட்டுமே மானியம் தரப்படும் என ஒன்றிய அரசு சொன்னதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மாநில சுயாட்சி பற்றி அடிக்கடி பேசி வரும் திமுக இதற்கு அடி பணிந்து போவது போல் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போது கொடி பிடித்து கோஷங்கள் எழுப்பி பதாகைகள் உயர்த்தி மூச்சிரைக்க பேசிய அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் இப்போதைய மின்சார கட்டணம் உயர்வுக்கு என்ன காரணங்களை அடுக்கப் போகிறார்கள் ?

ஒன்றிய அரசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரிகளாய் அமல்படுத்திக் கொண்டே இருக்கையில் அதைக் கேட்டு தள்ளாடும் ஒவ்வொரு சாமானியனும் தன்மேல் இன்னும் மேலதிக பாரங்களை வைத்துக் கொண்டே இருக்கும் அரசுகளை என்ன சொல்ல ?