சின்ன சேலம் ஜூலை 16, 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் தெரிவித்து உறவினர்களும்,பொதுமக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்பள்ளியில் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றை மூடி மறைத்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் நெருக்கடி, மன அழுத்தத்தை ஆராய்ந்து, உரிய தீர்வுகாண தமிழக அரசு தனிக் குழுவை அமைக்க வேண்டும்” – என்று விசாரணையை மேற்கொண்டு நடத்தி மர்மமான முறையில் இறந்த அம்மாணவியின் இறப்பிற்கு உண்மையான காரணிகளையும் ஒருவேளை அது கொலையாக இருந்தால் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை அளித்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தற்போதெல்லாம் சில பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள், அந்த மாணவர்கள் கல்விச்சாலைகளில் அல்லது தங்கும் விடுதிகளில் முந்தின நாள் வரை வெகு இயல்பாக மற்ற மாணவர்களிடையே பழகி வருகையில் திடீரென ஓர் நாள் மர்மான முறையில் தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. பின்னர் அவை விசாரணை செய்யப்பட்டு துப்பு துலங்கியதும் அது தற்கொலை அல்ல என்றும் ஒருவேளை கொலை செய்யப்பட்டு அதை தற்கொலை என்று மூடிமறைக்க முயன்றதும் தெரிய வருகிறது.

அது போன்றே ஜூலை 13 ஆம் தேதியன்று ஓர் 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் ஸ்ரீமதி எனும் பதின்ம வயதுடைய பெண் கள்ளகுறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார் அதுவும் அவர் கடந்த 1 ஆம் தேதியன்று அன்று தான் இப்பள்ளியில் சேர்த்து விட்டதாக அவரது தாயார் தெரிவித்தார். இந்நிலையில் 13 ஆம் தேதி அதிகாலையில் அம்மாணவி பள்ளி விடுதியின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பள்ளியின் நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அம்மாணவி கீழே குதித்து இறந்ததற்கான எந்த சுவடுகளும் அறிகுறிகளும் அவர் விழுந்த இடத்தில காணப்படவில்லை என்றும் ஆனால் அம்மாணவியின் உடலில் முகத்தில் காயங்களும் இரத்த சுவடுகளும் இருந்ததாக அவருடைய பெற்றோர் கதறியபடியே தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவோ அல்லது மாணவியை துன்புறுத்தி இருந்தார்களா என்றும் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும் பெற்றோர்களும் உறவினர்களும் அம்மாணவியின் உடலை வாங்க மறுத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் மேலும் பள்ளியின் முதல்வரை சந்திக்க முடியாதபடி போலீசார் குவிக்கபட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினர்.

கற்று வளர்ந்து தமது திறமையை வெளிக்கொணர்ந்து ஆளாகி நின்றிட ஆணிவேரே கல்வி தான். அவற்றை கற்பிக்கும் கல்விக்கூடங்கள் சில இன்றைக்கு மர்ம மரணங்கள் நிகழும் கூடங்களாக மாறி விட்டதோ என அச்சம் கொள்ள வைக்கிறது.

https://tamil.indianexpress.com/tamilnadu/private-school-girl-suspected-death-parents-rise-questions-480072/

https://www.bbc.com/tamil/india-62189130

https://tamil.samayam.com/latest-news/crime/sources-said-some-injuries-on-school-girl-neck-who-died-in-mysterious-way-in-chinna-salem/articleshow/92899011.cms

முக்கிய செய்தி

ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் – போராட்டம்

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்

5 வது நாளாக சடலத்தை வாங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம்.