சென்னை ஜூலை 19 2022

சென்ற ஆண்டு நடைபெற்ற சற்ற மன்ற தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் திமுக கட்சியினர் குறிப்பாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவருடைய மகனும் செயலாளரும் ஆன திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருவரும் திமுக ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால் சுமார் ஒன்னேகால் ஆண்டுகள் கடந்தும் நீட் விலக்கு பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

இதனிடையில் சில மாதங்களுக்கு முன்பாக சட்டசபையில் நீட் விலக்கு பற்றிய தீர்மானம் இயற்றி அதனை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள் அவர் அதை மீண்டும் ஜனாதிபதி அவர்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பி வைத்தார்கள். எனினும் இதற்கு ஓர் தீர்வை இன்னும் எட்ட முடியாமல் நீட் தேர்வு விலக்கும் பெற முடியாமல் நாட்கள் கடந்து வருவது தான் மிச்சம்.

ஒன்றிய அரசு சுகாதாரத் துறை ஆயுஷ் துறையில் இருந்து தமிழக அரசுக்கு சில விளக்கங்களை கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள் ஆளும் தமிழக அரசு விளக்கிச் சொல்லவில்லை. சட்டசபையிலும் இக்கடிதம் பற்றிய அறிவிப்பினை எதுவும் வெளியிடவில்லை.

கடந்த 17ஆம் தேதி அன்று நடைபெற்ற நீட் தேர்வு கலந்து கொண்ட மாணவர்கள் பலர் மிகுந்த மன உளைச்சலின் இடையே தேர்வினை எழுதியதாக தெரிய வருகிறது. மேலும் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு தீர்வாக எதைத்தான் இந்த தமிழக அரசு செய்து தரப் போகிறது.

ஒன்றிய அரசை பொருத்தவரையில் மத்திய அமைச்சகம் நீட் தேர்வு விலக்கு அளிப்பதற்கு இடமில்லை என்று தெரிவித்ததாக உணரப்படுகிறது. நீட் தேர்வு விலக்கு என்றால் பல மாநிலங்களில் அது ஒப்புக்கொள்ளப்பட்டு தொடர்ந்து நீட் தேர்வுகள் நடைபெற்று வருகிறது தெரிந்ததே.

நீட் தேர்வு விலக்கு இல்லை என்றால் அதை தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விடலாம் அதற்குப் பதிலாக நீட் தேர்வு மையங்களை தகுந்த திறமையுடன் கூடிய ஆசிரியர்களை கொண்டு நிறுவ முயற்சியை மேற்கொள்ளலாம். அதை விடுத்து இன்னமும் மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்க செய்கிறது இந்த விடியல் அரசு.

நமது மக்கள் நீதி மய்யம் 2021ல் தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வு விலக்கு சாத்தியமில்லை எனில் அதற்கு மாற்றாக சீட் தேர்வு எனும் திட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தது. மாணவர்களுக்கு கண்மூடித்தனமான உண்மையற்ற பொய்களை நாங்கள் கூற விரும்பவில்லை என்றும் அவர்களை மனதளவிலும் ஏமாற்ற மக்கள் நீதி மய்யம் என்றும் துணியாது மாறாக நீட் தேர்வு பயிற்சியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு தகுந்த முறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நமது மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் நீதி மய்யம் மற்றும் லன்ஸ் பார்க் எனும் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நமது மாநிலத்தில் பல இடங்களில் நீட் தேர்வு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. அப்ப பயிற்சி முகாமில் இருந்து நீட் தேர்வில் பல மாணவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி இல்லை என்றாலும் நமது மக்கள் நீதி மய்யம் மக்களுக்காக என்றும் களத்தில் நிற்கும்.