சென்னை ஜூலை 19, 2022

சென்னையில் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் தனது வருவாயில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கென ரூ.1.5 கோடி ரூபாயை அளித்தார். அப்போது அங்கே குழுமியிருந்த மய்யம் நிர்வாகிகளிடம் என் உழைப்பினால் ஈட்டிய வருவாயிலிருந்து கட்சியின் வளர்ச்சிக்கு அளித்த நிதியைப் போன்று உங்களால் இயன்ற அளவில் முடிகிற அளவிற்கு தொகையினை அளிக்க முடியும் எனில் என் உள்ளம் உவகை கொள்ளும் எனவும் நாம் பிற கட்சிகள் போல் பிறரிடம் இருந்து பிடுங்காமல் நமது உழைப்பினால் ஈட்டிய வருவாயிலிருந்து கட்சியை வழிநடத்திச் செல்கிறோம் என நெஞ்சம் நிமிர்த்தி சொல்லலாம் என்றார்.

அப்போது நமது மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் கட்சிக்கு நிதியாக காசோலைகள் மூலம் அளித்தார்கள்.