சென்னை ஜூலை 19, 2022

தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டத்தில் ஒரு விதை விதைக்கப்பட்டது.

ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுகையில் குறிப்பிட்ட கால நேரங்களில் அச்சேவைகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் வகையில் எந்தவித தாமதமும் இடையூறும் இன்றி அலுவலகங்கள் இயங்கும் நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அச்சேவைகள் கிடைக்க வழிவகை செய்திடும் சேவை உரிமைச் சட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று இதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசிடம் கோரிக்கை வைத்த மக்கள் நீதி மய்யம், தற்போது இன்னும் அச்சட்டம் அமல்படுத்தாமல் இருப்பதை உணர்ந்து அதை கிடைக்கச்செய்யும் வகையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும் பொருட்டு அதற்கான துவக்க புள்ளியாக நேற்று நடைபெற்ற அந்த கலந்தாலோசனை கூட்டத்தில் தலைவர் அவர்கள் பதாகையை அளித்து துவக்கி வைத்தார்.

துணைத்தலைவர் திரு A.G மௌரியா (பணி ஓய்வு ஐபிஎஸ்) திரு. கோவை தங்கவேலு மற்றும் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் ஆகியோர் அப்பதாகையை பெற்றுக்கொண்டனர்.