சென்னை ஜூலை-11, 2022

நீராதாரம் காக்க, விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்க, ஊழலை ஒழிக்க, பெண்கள் முன்னேற, உள்ளாட்சிக்கு குரல்கொடுக்க, மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக, கல்வித்தரம் உயர்ந்திட, சுங்கச்சாவடி குறைக்க, தேர்தலுக்குத் தயாராகிட & தலைவரின் சுற்றுப்பயணம் அறிவித்திடும் – மநீம செயற்குழு தீர்மானங்கள்.

கடந்த 2021 ஆண்டில் நடந்த ஆட்சி மாற்றத்தின்போது ஆளும் கட்சியாக தேர்வான திமுக தனது தேர்தல் பரப்புரையின்போது கிட்டத்தட்ட 500 வாக்குறுதிகள் அளித்தது அவற்றில் மிக முக்கியமானவற்றை 100 நாட்களில் நிறைவேற்றுவோம் என சொல்லி முழுதாய் ஒரு வருடம் முடிந்து போயிற்று ஆயினும் தந்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை தவிர வேறு யாதொன்றையும் இதுவரை நிறைவேற்றித் தரவில்லை. அதுவும் இல்லாது உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டும் அதிலும் கணிசமான தொகைகளை செலவிட்டு அதனை மீண்டும் எடுக்கும் பொருட்டு நடந்துவரும் அரைகுறைப் பணிகள் பல முறைகேடுகள் என சிரிப்பாய் சிரிக்கும் நிர்வாகம்.

இவற்றை யாவும் கண்டும் காணாமல் போக மக்கள் நீதி மய்யம் ஒன்றும் மற்ற கட்சிகளைப் போன்றதல்ல அதில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை பெற்றுத் தருவதே அக்கட்சியின் முக்கியத்துவம்.

எனவே இன்று ம.நீ.ம அலுவலகத்தில் நடந்து முடிந்த தலைமை செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு செயல்வடிவம் தர வேண்டி தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் நேரிடையாக தமிழகம் முழுக்க மக்களைக் காண சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய தமிழகம் மக்கள் நீதி மய்யம் உடன் பயணிக்கும் அதன் திட்டங்கள் அதனை முன்னுதாரண மாநிலமாக திகழச் செய்யும் என்றால் மிகையாகாது.

நாளை நமதே ! சீரமைப்போம் தமிழகத்தை !! நேர்மையின் குரலாக ; மக்களுக்காக மக்களால் மக்கள் நீதி மய்யம் !!!