பண்ருட்டி ஜூன்-28, 2022

ஒரு நாட்டின் அரசன் என்றால் அந்நாட்டில் வாழும் குடியானவர்கள் எல்லாரும் சமம் தான் அது போல தான் ஜனநாயக நாட்டில் அரசின் கீழ் வரும் பொதுமக்கள் யாவரும் ஒன்றே தான். தனியார் அமைப்புகளில், நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வேண்டுமானால் தகுதி மற்றும் வேறு ஏதேனும் அடிப்படைகளில் பாகுபாடுகள் பார்க்கப்படும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களை நீண்ட நெடுங்காலமாக பல மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மற்றும் மருத்துவர்கள் சிலர் அலைகழித்து வருவதும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள வருபவர்களை ஏளனமாக கையாள்வதும் நடந்து கொண்டு தான் வருகிறதுஇதெற்கெல்லாம் முற்றுபுள்ளி எப்போது ஏககாலத்தில் வருமோ என்று தெரியவில்லை. அப்படி அலட்சியம் காட்டுபவர்களை ஒடுக்க சாட்டையை எடுக்க வேண்டுமானால் தலைமை நிர்வாகம் நேர்மையாகவும் தூய்மையாகவும் லஞ்சமும் அற்றதாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய அப்பழுக்கற்ற ஆட்சி நிர்வாகத்தை தருவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு வரும் ஓர் நேர்மை தலைமையை கொண்ட கட்சியே மக்கள் நீதி மய்யம்.

அப்படி ஓர் சம்பவம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது கண்டிக்கத்தக்க செயல். விபத்தில் சிக்கியதால் காயமடைந்த தம்பதியர் சிகிச்சைக்கென அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமாறு கேட்கையில் அங்கிருந்த மருத்துவர் துரிதமாக சிகிச்சை அளிக்க முற்படாமல் அத்தம்பதியரிடம் விபத்தினால் ஏற்பட்ட ரத்தக்கசிவினை கழுவிவிட்டு வந்தால் தான் சிகிச்சையளிப்பேன் என்று அலட்சியமாக கூறியது மருத்துவத்தை அவமதிக்கும் செயலாக அமைந்து விட்டது.

“கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதியினருக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ” .. இரத்தத்தைக் கழுவிவிட்டு வந்தால்தான் சிகிச்சையளிக்கப்படும்” என்று சொல்வது மருத்துவ அவசர சிகிச்சை முறைகளுக்கு மட்டுமல்ல மனிதநேயத்திற்கும் முரணானது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தாலும் இதுபோன்ற செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு அரசு மருத்துவமனையை நாடி வரும் சாமானிய மக்களுக்கு முறையான சிகிச்சை, விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது”

மருத்துவம் படித்து அதனை பிறர் உயிர்காத்திட முதல் நபராக நிற்கும் மருத்துவர்கள் மற்றும் அத்துறை சார்ந்த இதர வல்லுனர்கள் மற்றும் பணியாளர்கள் என முக்கிய பங்கு வகிப்பவர்கள் தங்களின் உளமார்ந்த அன்புடன் பொறுமையுடன் மிகுந்த சிரத்தையுடன் மருத்துவ சிகிச்சை அளிப்பது அவர்களின் தனித்தன்மையை உலகுக்கு அறியச் செய்யும் மேன்மையான சேவையே மருத்துவம் எனபதை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களை சகோதரத்துவம் மற்றும் நட்புடன் அணுகுவதே சாலச்சிறந்தது என்பதை இத்தகைய அலட்சிய போக்கினை கொண்டிருக்கும் அந்த சில மனிதர்கள் உணர்தல் நன்று.