சென்னை, ஜூலை-15, 2022
நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் திரு K. காமராஜர் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணாக்கர்கள் நிச்சயம் நினைவு கொள்ள வேண்டிய உன்னதத் தலைவர் கல்வித் தந்தை என அன்பாக அழைக்கப்படும் காமராஜர் அவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலகட்டங்களில் பள்ளி பயிலும் மாணவர்களின் நலனில் சிறப்பான கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான சிறந்த கல்வியை கற்பிக்க வழிவகைகளைச் திறம்படச் செய்தார். வசதியற்ற எளியோர்களின் பிள்ளைகள் பசியினால் கல்விச்சாலைக்கு வர இயலாமல் போய்விடக்கூடாது என்று திட்டமிட்டு பள்ளிகளில் மதிய சத்துணவு வழங்கும் திட்டத்தை இடை நிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து வழங்கினார். முக்கியமாக கல்வியை இலவசமாக அதே சமயம் தரமானதாக வழங்க வேண்டும் என்றும் பெருமுயற்சி கொண்டார் அதன்படியே திகழ்ந்தார். கல்வியை போதிக்கும் ஆசிரியர் பெருமக்களை மதிப்புடன் நடத்தினார்.
வெகு எளிமையான முதல்வராகவும் சிறந்த தலைவராகவும் விளங்கிய அத்தகைய மாபெரும் தலைவரான திரு காமராஜர் அவர்களுக்கு நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரும் பெரும் மதிப்பையும் மரியாதையும் வழங்குவர்.
மாண்புமிகு முன்னாள் முதல்வர் கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நினைவு கூர்ந்து அவரை வணங்கி தனது வாழ்த்துகளை தலைவர் கமல் ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
நமது மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மாநில செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தில் அமையபெற்றுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.