சென்னை ஜூன் 23, 2022

பட்டி தொட்டியெங்கும் வெற்றி முரசு கொட்டும் திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு நம்மவர், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் மற்றும் பலர் நடித்துள்ள படம் விக்ரம். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தை அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்த இப்படம் வளர்ந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகம் முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் படம் துவங்கும் போது வரும் பத்தல பத்தல பாடல் நம்மவர் எழுதி பாடி நடித்தார், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இக்கால இளம் வயதினரை கவரும் விதத்தில் இசையை கொண்ட இப்பாடலை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாளம் போடவும் ஆட்டம் ஆடவும் வைத்தது வெளியான நாள் முதல் வைரல் ஆகி விட்டது.

பார்வைத் திறன் அற்ற இளம் திறமையாளர் திருமூர்த்தி நல்ல குரல் வளமும் எந்தப் பொருளையும் வாத்தியம் ஆக்கி அதில் இசை அமைத்து வரி தப்பாமல் பாடலையும் அசலாக அதே தொனியில் பாடும் திறன் பெற்றவர். சமீபத்தில் வெளியான அண்ணாத்தே படத்தில் பாடலும் பாடியுள்ளார். இசை அமைப்பாளர் இமான் இசையில் வெளியானது.

நொச்சிப் பட்டியை சேர்ந்த திருமூர்த்தி ஒரு பிளாஸ்டிக் குடத்தை வைத்து அதில் தாளமிட்டு பத்தல பத்தல பாடலை அதேபோன்று பாடி இணையதளத்தில் வெளியாக வைரலாகியது.

இதை நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அதனை மனதில் வைத்து இளம் திறமையாளர் திருமூர்த்தி அவர்களை நேரில் அழைத்து தமது உளமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். இன்றைய சந்திப்பின்போது பத்தல பத்தல பாடலை பாடிக் காண்பித்தார் திருமூர்த்தி. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உங்களின் ஆசை என்ன என்று கேட்டார் அப்போது திருமூர்த்தி நான் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். அதற்கு உடனடியாக செவிசாய்த்த தலைவர் அவர்கள் இசையமைப்பாளர் திரு ஏ ஆர் ரகுமான் அவர்கள் நடத்தும் இசைப்பள்ளியில் நீங்கள் விரும்பிய இசையை கற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக் கொண்டு செய்து தருகிறேன் என்றார்.

இதைக் கேட்ட திரு மூர்த்தி அவர்கள் நெகிழ்ந்து போனார் நிச்சயமாக உங்கள் பெயர் போற்றும் விதமாக நான் இசை கற்றுக் கொள்கிறேன் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நம்மவர் தலைவர் அவர்கள் திறமைக்கும் அன்புக்கும் மதிப்பு அளிப்பவர் இளைய வயதாக இருந்தாலும் அங்கே அவர்களின் திறமையை கண்டு ஊக்குவித்து திறமையை வெளிக்கொணர விழிகளையும் என்பதற்கு இதுவும் இன்னும் ஒரு சாட்சி.

தலைவரும் பாடகர் திருமூர்த்தி

இணைக்கப்பட்ட பதிவு:

சென்ற மாத இறுதியில் தலைவரை சந்தித்து வாசித்துக் காட்டிய மாற்றுத் திறனாளி திரு திருமூர்த்தி யிடம் இசையமைப்பாளர் திரு எ ஆர் ரஹ்மான் அவர்களின் இசைப் பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பயிற்சிக் கட்டணங்களை தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள். அப்படிச் சொன்னதை அப்படியே நிறைவேற்றி இருக்கிறார், திருமூர்த்தி அவர்களும் இசை கற்று வருவதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நன்றியும் தெரிவித்து உள்ளார்.