திருச்சி – ஆகஸ்ட் 16, 2௦22

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வலியுறுத்தியதன் பேரில் ஆய்வு செய்ய முடிவு செய்து மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்களின் தலைமையேற்க சமயபுரத்தில் அமைந்துள்ள அரசு நியாய விலை கடையில் ஆய்வு செய்யப்பட்டது.

அங்கே சரியான நேரங்களில் கடை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறதா என்றும் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் தரத்துடனும் சரியான அளவில் தரப்படுகிறதா எனவும் விசாரித்தனர். அக்கடையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அரசு உணவுபொருட்கள் விநியோக துறை மூலமாக போதுமான அளவுகளில் வந்து சேர்கிறதா எனவும் ஆய்வு செய்தனர்.