திருச்சி ஆகஸ்ட் 20, 2022
மக்கள் நீதி மய்யம் கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுக்க கட்சியின் மாநில செயலாளர்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் திருச்சியில் நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மாவட்ட (திருச்சி – தெற்கு) நிர்வாகிகள் உள்ளூர் நிகழ்வுகளை விவரித்து பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் மிக முக்கியமானது முறைகேடாக அள்ளப்பட்டு சேமிக்கப்படும் ஆற்று மணல் குவாரிகள் ஆகும்.
காவிரி படுகையில் முறைகேடாக தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் ஆற்று வளம் பாதிக்கப்படுகிறது மேலும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் தடுப்பணைகள் சேதமடையும் அபாயங்களும் ஏற்படும். தண்ணீரை தேக்கி வைக்க இயலாமல் வீணாக கடலில் கலக்கும் அவலமும் உண்டாகும், இதனால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையும் உயரும். எனவே இப்படி பல வகைகளில் இயற்கை சேதாரங்கள் உண்டாகும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது, குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் லால்குடி உத்தமர் சீலி மணல் குவாரிகள் மூடப்படவேண்டும் என்று வரும் நாட்களில் நடைபெற இருக்கும் கிராமசபை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தும் என இக்கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
மேலும் கிராமசபை கூட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திட தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களை கலந்து கொள்ளச் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.