விழுப்புரம், ஆகஸ்ட் 20, 2022

தமக்கு இடையூறுகள் தெரிந்தவர்கள் அல்லது முகம் அறியாத யார் மூலமாகவோ மிரட்டலோ தாக்குதலோ நடத்தபடுகிறது என்றால் பொதுமக்கள் நாடுவது காவல் துறையை தான்.

சமூக விரோதிகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் மற்றும் இன்னும் பல சிவில் வழக்குகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நீதி கிடைத்துவிடும் என்று செல்லும் ஒரே இடம் நீதிமன்றங்கள் மட்டுமே.

இப்படி இரண்டு இடங்களிலும் தமக்கான பாதுகாப்பும் நீதியும் கிடைக்கும் என்று நம்பும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தப்பட்ட இரண்டு துறைகளிலும் பல விந்தையான வழக்குகள் பதிவானதும் உண்டு. அப்படி ஒன்று காவல்துறையில் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் தனக்கு மேலுள்ள உயரதிகாரியான டிஜிபி மூலம் பாலியல் தொந்தரவிற்கு ஆளானதாக புகார் ஒன்றினை தெரிவித்து இருந்தார் . இதன் வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது. உயரதிகாரி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற செல்போன் உரையாடல்கள் மற்றும் வாட்சப் பதிவுகள் மேற்கூறிய நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டு பாதுகாக்கபட்டு வந்தது தற்போது வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டிய அச்சமையத்தில் மேற்கூறிய ஆதாரங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ந்து போன நீதிபதி விரைவில் அதைக் கண்டுபிடித்து சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார் எனும் செய்திகள் வெளியாகின. வெகு முக்கியமான வழக்கில் நீதிமன்ற பெட்டகத்தில் இருந்த சாட்சி ஆவணங்கள் காணாமல் போயிருப்பது ஏற்புடையது அல்ல இது காவல் துறை மற்றும் நீதித்துறையின் மேலுள்ள நம்பிக்கையை பொதுமக்களிடையே சிதைக்கும் எனவே இதில் யார் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று ஆராய்ந்து விரைவில் அவர்களைக் கண்டுகொண்டு தகுந்த தண்டனையை நீதியரசர்கள் தர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கை கீழே உங்கள் பார்வைக்கு :

2021-ம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தபோது, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து, அவற்றைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமான வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே காணாமல்போவது ஏற்புடையதல்ல. இது, காவல், நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோல நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.

https://www.dinamani.com/tamilnadu/2022/aug/20/sp-documents-falsified-in-sex-reporting-case-manima-condemns-3901780.html

https://tamil.abplive.com/news/villupuram/important-documents-in-case-of-sexual-harassment-of-woman-s-p-falsified-the-judge-was-shocked-68464

https://www.vikatan.com/news/crime/police-ips-officer-case-cctv-footage-missing-in-villupuram-court

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/villupuram/documents-went-missing-on-villupuram-women-sp-sexual-harassment-case-from-villupuram-court/tamil-nadu20220819133132817817458

https://timesofindia.indiatimes.com/city/chennai/sex-assault-case-key-papers-go-missing-from-trial-court/articleshow/93670018.cms

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/aug/20/key-evidence-against-ex-special-dgp-in-sexual-harassment-of-colleague-goes-missing-2489338.html

https://www.instanews.city/tamil-nadu/viluppuram/villupuram/documents-missing-villupuram-court-lost-1161011

https://www.thehindu.com/news/national/tamil-nadu/crucial-documents-missing-in-police-sexual-harassment-case/article65788927.ece