சென்னை ஆகஸ்ட் 10, 2022

மத்திய அரசின் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு இன்னுமொரு சான்று விளையாட்டுத் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் நிதியில் உள்ள வேறுபாடே ஆகும்.

தொடர்ந்து தமிழகத்தின் மீது பாரபட்சமாக இருக்கும் ஆளும் மத்திய பிஜேபி அரசு விளையாட்டுகளுக்கான கட்டமைப்பை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.33 கோடிகளும், அதே பிஜேபி ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ரூ.608 கோடிகளும் ஒதுக்கி இருப்பது கண்டனத்திற்குரியது என மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குஜராத்துக்கு ரூ.608 கோடி; தமிழ்நாட்டுக்கு ரூ.33 கோடி! விளையாட்டிலும் பாரபட்சம்; இந்த ஓரவஞ்சனை நியாயமா? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். (10/08/2022)

மத்திய அரசின் பாரபட்ச போக்கினை கண்டித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கையின் ஆங்கில வடிவம் :