கோவை, ஆகஸ்ட் 08, 2022

கோவை மாவட்டத்தில் மழைபொழிவினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. ஊர்களை இணைக்கும் தரைப்பாலம் கூட சேதமாகி விட்டபடியால் பொதுமக்கள் மறு பகுதிக்கு செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வழியாக கூடுதலாக பல கிலோமீட்டர்கள் பயணித்து பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். அப்படி ஓர் தரைப்பாலம் உடைபட்டதால் அதனை ஆய்வு செய்த மக்கள் நீதி மய்யம் கோவை (சிங்காநல்லூர்) நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் சேதமடைந்த பாலத்தினை வலுவாக மீண்டும் அமைத்துத் தர வேண்டி மனு அளித்தனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகளை பெற்ற கட்சிகளின் எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த சேதத்தினை சென்று பார்வையிடவில்லை மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மட்டுமே பார்வையிட்டு உடனடியாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் to வெள்ளலூர் சாலைப் பகுதியில் நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் மக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆகையால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது இதை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் அமைத்து வழி வகை செய்யுமாறு கோவை வட கிழக்கு மாவட்ட செயலாளர் M. மனோரம்யன் அவர்களின் ஆலோசனைப்படி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது இந்நிகழ்வில் சிங்காநல்லூர் மாவட்டத் துணைச் செயலாளர் K. மயில் கணேஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் S. மணிமொழி, மாநகராட்சி செயலாளர் Dr.A. சௌந்தரராஜன், வட்டச் செயலாளர் சரவணன், மற்றும் கோவை தெற்கு நிர்வாகிகள் தாஜுதீன் , கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.”