பல்லாவரம், செப்டம்பர், 12, 2022

ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் சொத்துவரி & மின்கட்டணத்தை உயர்த்தி வருவதை கண்டித்தும் மக்கள் நீதி மய்யம் செங்கல்பட்டு & பல்லாவரம் மாவட்டம் சார்பாக பெருந்திரளான மய்ய உறவுகள் அனைவரும் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை துணைத்தலைவர் திரு A.G. மௌரியா அவர்கள் தலைமையில், மாநில செயலாளர்கள் திரு செந்தில் ஆறுமுகம், திரு சிவா இளங்கோ அவர்கள் முன்னிலையில், விவசாய அணி மண்டல அமைப்பாளர் திரு சண்முகம், மாவட்ட செயலாளர்கள் திரு பால் நியூளின், திரு பிரவின் மார்கஸ், திரு தேசிங்கு ராஜன், திரு மாறன், பேச்சாளர் திரு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் செங்கல்பட்டு – பல்லாவரம் மாவட்டப் பொறுப்பாளர் திரு உதயச்சந்திரன் முன்னிலை வகித்தார், மேலும் பல நிர்வாகிகள் சூழ சென்னை குரோம்பேட்டையில் நடத்தப்பட்டது.

“மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து (மின்கட்டண-சொத்துவரி உயர்வு, டோல்கேட், பெட்ரோல்-டீசல்-கேஸ்- விலை உயர்விற்காக) செங்கல்பட்டு-பல்லாவரம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக குரோம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.”

நிகழ்விற்கு துணைத்தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் விவசாய அணி மண்டல அமைப்பாளர் திரு.சண்முகம், மாவட்ட செயலாளர்கள் திரு.பால் நியூளின், திரு.பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

மாவட்ட செயலாளர்கள் திரு.தேசிங்குராஜன், திரு.மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் செங்கல்பட்டு-பல்லாவரம் மாவட்டப் பொறுப்பாளர் திரு.உதயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.