மதுரை, செப்டெம்பர் 13, 2022

மக்கள் நீதி மய்யத்தின் மதுரை மண்டல செயலாளர் திரு அழகர் தலைமையில், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் திரு கணேசன் குமார் அகவ்ர்களின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு நாகராஜன் அவர்களால் மதுரையில் 6 இடங்களில் கட்சியின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது.

மாவட்ட தலைமை அலுவலகம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளுவர் சிலை, பேருந்து பணிமனை, கட்சி அலுவலகம், கம்பம் தொகுதி கோகிலாபுரம் ஊராட்சி மற்றும் கம்பம் நகராட்சி ஆகிய 6 இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்வினைத் தொடர்ந்து மய்ய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்வில் மதுரை மண்டல நற்பணி இயக்க அமைப்பாளர் திரு.சிவபாலகுரு, இணை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்லப்பாண்டி, தேனி மேற்கு மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர் திரு.பாலஹாசன், மாவட்ட பொருளாளர் திரு.ஆஸ்கார் அய்யப்பன் மற்றும் தேனி மேற்கு மாவட்ட மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.