திருக்கழுக்குன்றம் – செப்டெம்பர் 14, 2022

விளம்பரத்திற்காகவும் ஊர் மெச்சவும் தான் ஓர் ஆட்சி நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது !

செங்கல்பட்டு மாவட்டம் பொன் பதர்க்கூடம் பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் இயங்கவிருக்கும் நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று திறக்கப்பட்டது. அப்போது திறப்பு விழா சம்பிரதாயமாக சில நெல் மூட்டைகளை கொள்முதல் செய்துவிட்டு விழா நிறைவு பெற்றதும் அப்படியே விட்டுவிட்டனர்.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள 54 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யலாம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து தங்கள் வயலில் விளைந்து நின்ற நெற்கதிர்களை அறுவடை செய்து விட்டு நாள்கணக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரியும் சரியான தகவல்களை தெரிவிக்க முற்படவில்லை. அதிகாரப்பூர்வமாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் முழுமையாக செயல்பாட்டுக்கு வருமோ என காத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் அவலம் என்றைக்கு உணர்வார்கள் ? அதுவரை அறுவடை செய்த நெல்மூட்டைகளை எங்கே எப்படி பாதுகாப்பாக வைத்திட இயலும் இயற்கைச்சூழல் பாதுகாப்பாக வைத்திட இடம் கொடுக்குமா என்ன ?

செங்கல்பட்டு மாவட்டம் பொன்பதர்கூடம் பகுதியில் சமீபத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவின்போது சம்பிரதாயத்துக்காக சில நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், இந்நிலையமானது இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 54 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இங்கு நெல் விற்பனை செய்யலாம் என்ற நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் நெல் அறுவடை செய்துவிட்டு, கொள்முதல் நிலையம் எப்போது செயல்படும் என்று காத்திருக்கின்றனர். உடனடியாக இதனைச் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து நெல் கொள்முதல் பணிகளைத் தொடங்க வேண்டும். இதேபோல, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் செயல்படாமல் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது.” – மக்கள் நீதி மய்யம்

இதற்கு முன்னதாக நெல் கொள்முதல் நிலையங்களை அறுவடைக் காலமான ஜனவரி மாதத்தில் கூட திறக்காமல் மெத்தனப் போக்கை கண்டித்து அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் இப்படி அறுவடை செய்யப்பட்ட கொள்முதல் செய்யாமல் இருக்க நேரிடுவது இயற்கைச் சீற்றங்களால் பாழாகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டிய மய்யம் போதுமான அளவில் நெல் கொள்முதல் செய்ய நிலையங்களை விரைவில் திறந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியது (தி இந்து தமிழ் இணைய நாளிதழில் 19.01.2022 தேதியில் வெளிவந்தது உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது)

https://www.hindutamil.in/news/tamilnadu/758767-is-it-not-possible-to-open-paddy-procurement-centers-during-the-harvest-season-question-to-the-government-of-tamil-nadu-1.html

https://www.toptamilnews.com/thamizhagam/Ponpadharkudam-paddy-procurement-station-into-operation/cid8506528.htm

நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை பற்றியும் மக்கள் நீதி மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது

நன்றி : தந்தி T.V