தமிழகம் – செப்டம்பர் 27, 20222

சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம்.

“நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்” – கமல் ஹாஸன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நமக்கு கடமைகள் இருக்கிறது, இந்த பூமி, சுற்றுச்சூழல், நல்ல கல்வி, சிறந்த மருத்துவம், சாதி மதம் இனம் மொழி என அனைத்திற்கும் அப்பாற்பட்டு மனித நேயம் வளர்த்தல், சமத்துவம் பேணுதல், வரியவர்களுக்கு வாழ்வு அளித்தல், போதை மற்றும் போதைப் பொருட்கள் தவிர்த்தல், குருதிக் கொடை, உடல் உறுப்பு தானங்களும் போற்றுதல் என இன்னும் நிறைய போற்றுதற்குரிய பல உண்டு அவைகளை பிறரை செய்யச் சொல்லியதோட நில்லாமல் தானும் செய்து காட்டிய திரையில் மட்டுமே திறம்பட நடிக்கும் ஓர் ஒப்பற்ற கலைஞன். அரசியலில் மாற்றம் ஒன்றை விதைத்து விட துடிக்கும் ஓர் உன்னத தலைவன் ஈட்டிய பணத்தை அசையா சொத்துக்களில் முதலீடு செய்யாமல் தமிழக மக்களின் நலன் கருதி அரசியல் இயக்கத்தினை வழி நடத்த செலவிடும் மாமனிதன் !

இவர் நிராயுதபாணியல்ல கையில் இருப்பதும் ஓர் ஆயுதமே ; ஆனால் இந்த ஆயுதம் எவரையும் குத்திக் கிழிக்காது, இரத்தம் சிந்தச் செய்யாது, உயிர் கொல்லாது ஏன் என்றால் இவர் தன் கைகளில் உறுதியாக பற்றிக் கொண்டிருப்பது காந்திய வழியில் அஹிம்சை எனும் ஓர் பேராயுதம் !

Courtesy : Maiam Databank