சென்னை – அக்டோபர் 21, 2022

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தலைமை நிலையத்தில் மாநில நிர்வாகக் குழு (CGB) கூட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைமை குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள், தலைவர் மேற்கொள்ள உள்ள அடுத்தகட்ட மாவட்ட பயணம், கவனம் செலுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய சமூகப் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களான துணைத் தலைவர்கள் திரு ஏ ஜி மௌரியா(RTD IPS)மற்றும் திரு கோவை தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் திரு சிவ இளங்கோ, திரு செந்தில் ஆறுமுகம், திரு எஸ் பி அர்ஜுனர்,, நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜி நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

தலைவர் கமல் ஹாசன்