கேரளம், அக்டோபர் 02, 2022

கேரள மாநிலம் CPI(M) தலைவர்களில் ஒருவரான திரு.கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்கள் அக்டோபர் 01 ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழஞ்சலி !

“சிபிஐஎம் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் அமைச்சரும், எனது இனிய நண்பருமான கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் ஒருவர். அவருக்கு என் அஞ்சலி.” – கமல் ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்

The passing away of Veteran CPI(M) politburo member, former Kerala party State Secretary and a good friend of mine, Kodiyeri Balakrishnan is deeply shocking. He had devoted himself to public service for over half a century and was one of the pioneers who developed the Marxist party in Kerala. My heartfelt tribute to him.” – Kamal Haasan, President – Makkal Neethi Maiam