சென்னை – அக்டோபர் 02, 2022

அறத்தின் பெயரால் அஹிம்சையின் பெயரால் அயராது போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மறுபெயர் மகாத்மா. யார் எவரென தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா பேரரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், லட்சக்கணக்கில் கிழக்கு இந்தியக் கம்பெனியான ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி மாண்டு போயினர். இதில் எந்த மதமும் இன்ன சாதியினரும் தான் போராடி தம் உயிரை உடமையை நிலங்களை, உற்றார் உறவினர்களை இழந்தார்கள் என அறுதியிட்டு கூறிட முடியாது. நம் தேசம் நம் சுவாசம் என்பதாக நினைத்த நம் மக்களை நம் தாய் மண்ணை அடிமைபடுத்திய வெள்ளையர்களை ஓடாமல் ஒளியாமல் குத்திச் சாய்த்தனர், வெட்டி வீழ்த்தினர் பலர். இன்னும் இன்னும் என காலங்கள் ஓட போர்களாலும் படைகளாலும் இப்பகைவர்களை ஒழிக்க முடியாது என்றெண்ணிய பலர் ஒன்றாய் கூடி ஆயுதங்கள் வேண்டாம், வெடி மருந்துகள் வேண்டாம் அறம் ஒன்றே போதும் அஹிம்சை மட்டுமே தீர்வாகும் என களம் இறங்கினர் அதற்கு தலைமையாய் நம் காந்தி.

உலகில் மிக வலிமையானது மற்றும் கத்தியின்றி இரத்தமின்றி சிறந்த ஆயுதமாக அஹிம்சையை கையிலெடுத்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. உப்பு சத்தியாகிரகம் செய்தார், உண்ணா நோன்பிருந்தார் உயிரைத் துறப்பேன் ஆயினும் ஆயுதம் எதையும் கைகளில் ஏந்த மாட்டேன் என்றார். அன்னாரின் அசாத்திய பொறுமையையும் ஆயுதம் ஏந்தாவிடினும் வலிமையையும் தம் அஹிம்சை வழியில் காண்பித்த காந்தியின் பால் மாற்றம் அடைந்த கும்பினிப் படை ஆகஸ்ட் 15 ஆம் 1947 இல் சுதந்திரம் அறிவித்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா என்றழைக்கபட்டார். எத்தனை உயிர்கள் பலி கொண்டது சுதந்திரம் வேண்டும் எனும் வேட்கைத் தீ. இறுதி வடிவம் காந்தியடிகளால் நம் கைகளுக்கு விடுதலை தந்தது.

அன்னாரது அடியொற்றி சிறு வயது முதலே தம் பெரும் குடும்பத்தின் பற்று காந்தியாரின் மேலும் அஹிம்சையின் மீதும் அறத்தின் வழியாக பயணிப்பதும் உணர்ந்த நம்மவர் திரு கமல் ஹாசன் அதன் பொருட்டே பல தலைவர்களை படிக்கத் துவங்கினார். காந்தியார் அவர்களை தம் மனதிலும் அவரின் கொள்கைகளை தம் வாழ்விலும் நிலைநிறுத்திக் கொண்டார். இன்று வரை இம்மி பிசகாமல் நேர்மையை மக்களுக்கு ஆற்ற வேண்டிய தம் கடமையை தவறாது செய்து வருகிறார் நம் தலைவர். லஞ்சம் வன்முறை நிறைந்துள்ள இந்த பூமியை தம்மால் இயன்றிடும் அளவிற்கேனும் மாற்ற முயலும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீதி மய்யம் தனை துவக்கி வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். அஹிம்சையும் அறத்தின் பால் அசையா நம்பிக்கை கொண்டுள்ள நம்மவர் வெகு விரைவில் மாற்றம் செய்யும் இடத்திற்கு நிற்பார்.

மகாத்மாவின் பிறந்த நாளிற்கு தலைவரின் செய்தி

மாற்றவேண்டுமென முடிவெடுத்து களமிறங்கிய மறுநிமிடமே நீங்கள் வாரியர். போர் வீரர். மாற்றத்தை விரும்பினால் அதை உன்னிலிருந்து தொடங்கு என சொன்ன காந்தி ஒரு போர் வீரர். இந்த உலகை மாற்றும் வல்லமை எல்லாருக்கும் இருக்கிறது என்பதுதான் காந்தியின் வாழ்வு சொல்லும் செய்தி. அவரை வழிபடுவது சுலபம். அவர் வழிநடப்பதே வீரம். – கமல் ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்