சென்னை, நவம்பர் 1௦, 2௦22
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மட்டுமல்லாது நகராட்சி ஊராட்சி மன்றங்களில் பணியாற்ற மக்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஜனநாயக முறையே வாக்களிக்கும் தேர்தல் முறை. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அதிகாரங்களும் குடிமக்களுக்கு உரியது என்பது குடியரசின் தத்துவம், குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வாக்குகள் அளிப்பதன் மூலம் தங்கள் உரிமையை பயன்படுத்தி தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்து அதிகாரத்தில் அமர்த்துகின்றனர்.
மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வாக்குரிமை மிக முக்கியமானது ஆகும்.
மேற்கத்திய நாடுகளில் சிலவற்றில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று சட்டமே உள்ளது அப்படி வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு அபராதமோ சிறைதண்டனையோ அளிக்கப்படுகிறது.
நமது இந்தியாவில் வாக்களிக்க உகந்த வயதாக 18 வயது பூர்த்தியடைதலை அளவுகோலாக வைத்துள்ளார்கள். ஆணோ, பெண்ணோ அல்லது பாலினம் கடந்தவர்களோ என எவராக இருப்பினும் அவர்கள் தன்னிச்சையாக இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் வழியாக நேரிடையாக மாநில மற்றும் மண்டல அலுவலகங்கள் மூலம் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை தகுந்த தரவுகளை அளித்து பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலமாக நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் தங்களது வாக்குகளை அவர் விருப்பப்படி செலுத்தலாம். அவ்வாறு பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகள், முகவரி மாற்றம் இருப்பின் அதனை குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசின் சார்ந்த துறைகளின் வழியாகவும் விண்ணப்பம் செய்து மீண்டும் சரியான தரவுகளுடன் கூடிய வாக்களர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
வாக்களிப்பது நம் உரிமை என்பது மட்டுமல்ல அது ஜனநாயக கடமையும் கூட. உங்களுக்கு உகந்த நபர்கள் வேட்பாளர்களாக இல்லாமல் போனால் கூட அதற்கென உள்ள NOTA எனும் முறையை கூட வைத்து தங்கள் உரிமையை மற்றும் கடமையை நிறைவேற்றலாம்.
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம், தமிழகத்தின் மிகச்சிறந்த கலைஞராக ஏன் இந்தியாவின் மிகச்சிறந்த மனிதராக விளங்கி வரும் திரு கமல் ஹாசன் அவர்கள் எந்த தேர்தல்களிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. தேர்தல் நாளான அன்று நிச்சயம் அவருடைய கடமையை நிறைவேற்றி விடுவார். அது மட்டுமல்லாமல் நாட்டின் பொதுநலன் கருதி வாக்களிக்கக் கோரும் விளம்பரங்களில் தோன்றி வாக்களித்தல் பற்றிய சிந்தனைகளை அதனால் உண்டாகும் முக்கிய பணிகளை விளக்கமாக சொல்லி அன்புடன் கேட்டுக் கொள்வார்.
அது போன்றே வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பெறவும், அல்லது அதில் அத்தியாவசிய தரவுகள் மாற்றங்கள் செய்து கொள்ளவும் வேண்டி ஒவ்வொரு முறையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிடும்போது அதனை பொதுநலன் கருதி தமது பொறுப்பினை உணர்ந்து மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.
நமது அரசின் ஜனநாயக மாண்பினை காக்கவும் மக்களின் உரிமையை கடமையை உணர்த்தும்படியாக தற்போதும் இது போன்ற ஒரு விழிப்புணர்வு உண்டாக்கும் படியாக காணொளியை மற்றும் எழுத்து வடிவிலான அறிக்கையினை தமது தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார் திரு கமல்ஹாசன்.
அனைவரும் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டதை விட அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள் என்று தான் அதிகமாக வலியுறுத்தி உள்ளேன் – கமல்ஹாசன் – தலைவர் ம.நீ.ம