சென்னை நவம்பர் 21, 2௦22

தமிழ்த்திரையுலகில் பல ஜாம்பவான்கள் பரிணமித்து வந்தார்கள். அவர்களில் ஒருவராக திரு ஆரூர்தாஸ் அவர்கள். கதை திரைக்கதை வசனங்களில் புகழ்பெற்ற இவரது ஆளுமை திரையுலகில் என்றும் மறக்கப்படாது.

முதுமை காரணமாக இயற்கை எய்திய திரு ஆரூர்தாஸ் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழ்த்திரையுலகில் முடிசூடா மன்னராக விளங்கிவரும் திரு கமல்ஹாசன் அவர்கள் புகழஞ்சலியை செலுத்துகிறார்.

ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும்கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.

அன்னாரது மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மய்யத்தமிழர்களின் ஆழ்ந்த இரங்கல்கள்