சென்னை – 19, 2௦22

தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பயிற்சி பட்டறையில் இன்று (19-11-2022) “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்பது குறித்து. 6-வது வாரமாக தொடர்கிறது.

ரசிகர் மன்றங்களாக இருந்தவற்றை நற்பணி இயக்கமாக மாற்றிய தலைவரின் ஆலோசனைப்படி தொடரும் எண்ணிலடங்கா நற்பணிகள். அதில் முக்கியத்துவம் பெரும் இரத்ததானம்.

அதனை பெருமளவில் செய்து வந்த கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்கள் இந்தியாவில் மற்றும் உலகெங்கும் பரந்துபட்ட பல நாடுகளில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் KAMALs BLOOD COMMUNE எனும் அமைப்பைத் தொடங்கி வைத்து பேசிய தலைவர் அவர்கள் இந்த அமைப்பின் நோக்கம் எந்தவித தடையும் இல்லாமல் இரத்தம் தேவைப்படுபவர்கள் இந்த அமைப்பினை தொடர்பு கொண்டால் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்து தருவார்கள் எனவும், ஆங்காங்கே செயல்படும் குருதிக் கொடையாளர்களை ஓர் அமைப்பின் கீழ் இணைக்கும் முயற்சியே இது என்றவர் இதுவரை நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அளித்திருக்கும் குருதிக் கோடை சுமார் நான்கு லட்சம் லிட்டர் வரை இருக்கும் என்று சொல்வதைக் கேட்டதும் அவ்வளவு பெருமை கொள்ளத் தோன்றுகிறது.

எனவே இரத்ததானம் பற்றிய ஓர் விழிப்புணர்வு, உரையாடல்களை கொண்டுள்ள பயிற்ச்சிபட்டறை ஒன்றினை நடத்துமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் சனிக்கிழமை இன்று 19.11.2௦22 மாலை 5 மணிக்கு துவங்குகிறது

இன்னும் இரத்ததானம் செய்வதினால் உண்டாகும் நன்மைகள் அதனால் பயன்பெற்று உயிர்கள் பல காப்பாற்றப்படும் என்பதையும் இதுவரை இரத்ததானம் செய்யாமல் அச்சத்துடன் இருப்பவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கவும் அவர்களையும் இந்த அரும்பெரும் பணியைச் செய்திட பல விளக்கங்களை இப்பயிற்ச்சிப் பட்டறை வழியாக எளிமையாக விளக்கிட பேசுகிறார் மருத்துவர் ஷர்மிளா அவர்கள். இந்த பயிற்சிப்பட்டறையில் பங்குபெற்று கற்றுக் கொள்ளும் அனைவரும் பிறருக்கு உதவிடும் வகையில் தங்கள் ஈடுபாட்டினை காட்டி பொதுமக்களுக்கு உதவிடுவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இத்தகைய அருமையான பயிற்சிப்பட்டறைகளை ஏற்பாடு செய்துவரும் மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், இதில் சிறப்புரையாற்றும் வல்லுனர்களுக்கும், பங்குபெறும் அனைவருக்கும் மய்யத்தமிழர்கள் தமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.