சென்னை : டிசம்பர் 25, 2௦22

இந்தியாவை ஆளும் மத்திய பிஜேபி அரசு இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள் அனைத்தும் கற்றுக் கொள்ள வலியுறுத்தப்படும் என்று பேசி வருகிறார்கள். இதனை யதார்த்த ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம். உலகெங்கிலும் மருத்துவமுறைகள் சிகிச்சைகள் ஆங்கில மொழி மட்டுமே கொண்டது. ஆங்கிலம் என்பது உலகளாவிய மொழி எனும்போது மருத்துவமும் அதனைச் சார்ந்த பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பு ஆகிய அனைத்தும் சுலபமாக நிறைவேற்ற முடியும் என்பதே.

இவற்றை வைத்து மதிப்பீடு செய்ய முடியும் என்றால் ஆங்கில வழி கல்வி என்பதே மிகச்சுலபமாக அணுகும் முறையாக நாம் புரிந்து கொள்வது. ஒரே நாடு ஒரே மொழி எனும் கோட்பாட்டை கையில் எடுத்துள்ள மத்திய அரசு தற்போது இந்தியை புகுத்துவது எதேச்சதிகார முறை என வெளிப்படையாக தெரிகிறது.

நமது தமிழகத்தில் பிரதான மொழி மற்றும் பேசும் எழுதும் மொழி என்று பார்த்தோமானாலும் தமிழ் மொழி என்பது அனைவருக்கும் தெரியும். இது போல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மொழிவாரியாக செயல்படுபவை. அவற்றை அதன் பாரம்பரியத்தை சிதைக்கும் நோக்கமாகும். இந்தி திணிப்பைப் பற்றி கேரளத்தின் CPI-M கட்சியின் MP திரு ஜான் பிரிட்டாஸ் (Mr. John Brittas) தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பாராளுமன்றத்தில் பேசிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா?” – திரு ஜான் பிரிட்டாஸ் MP (CPI-M)

இதனைப்பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் அதனை கீழே தந்துள்ளோம்

“இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ” தாய்மொழி எமது பிறப்புரிமை.பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல்.வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும்.ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்.திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும்.”

மக்கள் நீதி மய்யத் தலைவரின் இந்தி திணிப்பு பற்றிய ட்விட்டர் செய்தி இன்றைக்கு ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. இதனை முன்னெடுத்த தமிழக ஊடகங்களில் மய்யத்தின் மாநில செயலாளர்கள் மற்றும் சில நிர்வாகிகள் பல விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள்.