புது தில்லி – டிசம்பர் 24, 2022

இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் திரு ராகுல்காந்தி அவர்கள் முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த் ! BharatJodoYatra – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

Walking to connect the legacy of our glorious past with our bright future Mr Rahul Gandhi Makkal Neethi Maiam / Bharat Jodo Yatra – Thiru Kamal Haasan, President – Makkal Neethi Maiam

இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் முன்னெடுப்பில் கன்னியாகுமரியில் துவக்கப்பட்டு தென்மாநிலங்கள் வழியாக புது தில்லியை அடைந்துள்ள பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை கலந்துகொள்ள அழைத்தார். அவர் மீதுள்ள அன்பின் மிகுதியால் தேசத்தின் ஒற்றுமைக்காக நடைபெறும் இந்த யாத்திரையில் தனது பங்கும் இருக்க வேண்டி ராகுல் காந்தியின் அழைப்பினை ஏற்று இன்று புதுதில்லிக்கு சென்றடைந்த மய்யத் தலைவர் மதியம் சுமார் மூன்று மணியளவில் தன்னை பாரத் ஜாடோ நடைபயணத்தில் இணைத்துக்கொண்டு சென்றவர் செங்கோட்டையில் அமைக்கபட்டிருந்த மேடையில் உரையாற்றினர்.

நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் இதர சமூக வலைதளங்களில் காணலாம் அதன் லிங்க்குகள் விரைவில் உங்களின் பார்வைக்கு இங்கே பதிவு செய்யப்படும்.