மதுரை – டிசம்பர் 23, 2௦22
“பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு பொருட்களில் கடந்த ஆண்டுகளில் வழங்கிய கரும்பையும் இணைக்கக் கோரி கரும்புடன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (மேலூரில்) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரசை நம்பி கரும்பைப் பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பையும் சேர்த்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது“. – மக்கள் நீதி மய்யம் அறிக்கை
2௦22 ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பும் உடன் கரும்பும் அளிக்கப்பட்டது. தற்போது வரும் 2௦23 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கமாக ரூபாய் 1௦௦௦ தருவதாக அறிவித்தார் முதல்வர் எனினும் அதில் கரும்பு தருவதாக எந்த குறிப்பும் இல்லை. சுமார் நான்கைந்து வருடங்களாக பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நடப்பாண்டின் பொங்கல் தொகுப்பில் அளித்த பொருட்களின் தரம் கேள்விக்குறியானதை தொடர்ந்து ஆளும் திமுக அரசானது சரியாக கையாளாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அடுத்த வருடத்தில் எந்தப் பொருளும் அளிக்காமல் மாறாக ரொக்கமாக பணம் அளிக்கப்படும் என்பதாக அறிவித்தார் முதல்வர்.
பொங்கலுக்கு கரும்புகள் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் பல ஏக்கர்களில் கரும்பு சாகுபடிகள் செய்யப்பட்டு கொள்முதலுக்கு தயாராக வைத்திருந்த விவசாயிகள் அரசின் எந்த அறிவிப்பும் வெளியாகாதது குறித்து கவலையடைந்தனர். மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வேதனையடைந்த விவசாயிகள் சங்கத்தினர் மதுரை மேலூர் பகுதில் மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் தங்கள் கைகளில் கரும்புகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவரின் எண்ணம் எந்தவித நியாமான போராட்டங்களும் அறத்தின் வழியே செல்ல வேண்டும் என இப்போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மதுரை கிழக்கு விவசாய அணி அமைப்பாளர் திரு அழகுசுந்தரம் மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாகுபடி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படாமல் வீணாகும் நிலைக்கு தள்ளபட்டால் கடன்பட்டு செய்த விவசாயிகளின் கதி என்னவாகும் ? கரும்பைச் சுவைப்பவர் வாய் இனிக்கும், அது உண்மையே ஆயினும் அக்கரும்புகளை விளைவித்த விவசாயிகள் நிலை கசக்கும் இதற்கு தமிழக அரசின் பதில் என்ன ?