சென்னை : ஜனவரி ௦6, 2௦23

“எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் ஆணித்தரமான பேச்சு.

காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் முன்னெடுப்பில் தேச ஒற்றுமைக்கான பயணமான பாரத் ஜோடோ யாத்ராவில் புது தில்லியில் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொண்டார். உடன் அடுத்தகட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஆயிரகணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெற்ற யாத்திரையில் கலந்துகொண்டவர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருந்தோம்பல் நிகழ்வும் தலைவர் அவர்களின் தலைமையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருகில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவை உள்ளரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தலைமையேற்று துவக்கி வைத்த தலைவர் சிறப்பான உரையைத் தந்தார் என்றால் மிகையாகாது.