சென்னை : பிப்ரவரி ௦2, 2௦23
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் தலைவரான திரு EVKS. இளங்கோவன் அவர்களின் மகனான திரு. திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 4 ஆம் தேதியன்று மாரடைப்பால் காலமானார்.
இதனால் இந்திய தேர்தல் ஆணையம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து பலர் தங்கள் கட்சி சார்பிலும் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தனர். எனவே இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் திரு EVKS. இளங்கோவன் அவர்களை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் பஜாக அரசின் பாசிச போக்கினை அனுமதிக்கக் கூடாது என்றும் வடமாநிலங்களில் நிகழ்ந்து வரும் கசப்பான அனுபவத்தினை தமிழ்நாடு சந்திக்கக் கூடாது என்றும் நினைவில் நிறுத்தி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் செய்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவினை மக்கள் நீதி மய்யம் அளிக்கிறது என்றும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இடைதேர்தல் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளாராக மாநில நிர்வாகக் குழு உறுபினராக பொறுப்பு வகிக்கும் திரு அருணாச்சலம் அவர்கள் நியமிக்கப்பட்டுளார்.
அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து இடைத்தேர்தல், பிரச்சாரம் குறித்து கலந்துரையாடினார். நிகழ்வின்போது மய்ய நிர்வாகிகள் உடனிருந்தனர்.