சென்னை : ஜனவரி 3௦, 2௦23

வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட கட்சியாக கடந்த 2௦18 இல் துவக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமே மக்கள் நீதி மய்யம். அரசியல் சாக்கடை என்பார்கள் ஆனால் அதை சுத்தம் செய்ய எவரும் துணியவில்லை ஆனால் எந்த நேரடி அரசியல் தனக்கு வேண்டாம் என்றாரோ அந்த எண்ணத்தை கைவிட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என முடிவு செய்து மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவக்கினார். கட்சி துவங்கியதைக் கண்டு பலரும் வியந்தார்கள் அவருக்கு வேண்டப்பட்டோர் மகிழ்ந்தார்கள். திரைத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நம்மவர் அதில் சம்பாதித்த பணத்தை எவர் தந்தாரோ அவர்களுக்கே அதாவது பொதுமக்களுக்கு நற்பணிகள் வழியாக திரும்பத் தந்தார். ஆயினும் அதிகாரம் கைகளுக்கு கிடைக்கும்பட்சத்தில் இன்னும் பரந்துபட்ட அளவில் மக்களுக்கு கிடைக்கபெற வேண்டுமானால் ஆட்சிக்கு வருவது அவசியம் என்பதை உணர்ந்தார். பாதியில் கலைந்து போகும் என்று ஆரூடம் சொன்னவர்கள் வாய்களை மூட வைத்து 6 ஆவது வருடம் நோக்கி கட்சியை வழிநடத்திச் செல்கிறார். உடன் அமையபெற்ற துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என களத்தில் ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

அந்தவகையில் சென்னை மத்திய வடக்கு மாவட்ட செயலாளர் திரு V. உதயகுமார் அவர்களின் முன்னெடுப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்வு கொடுங்கையூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பளாராக வழக்கறிஞர் திரு அருணாச்சலம் அவர்கள் முன்னிலை வகித்தார். மாற்றுக்கட்சியினர் சுமார் 5௦ பேர் தங்களை மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதில் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு குறித்து மக்கள் நீதி தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது உங்கள் பார்வைக்கு :

நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் நேர்மையான அரசியல் பாதையில், மாற்றுக்கட்சியிலிருந்து வந்து 51 பேர்கள் இணைந்தனர். சென்னை மத்திய வடக்கு மாவட்டம், மாவட்ட செயலாளர் திரு.V. உதயகுமார் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணையும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு அருணாச்சலம் அவர்களின் தலைமையில் 30 பேர் மகளிர், 21 பேர் இளைஞர்கள் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். பிறகு கூட்டத்தில் உரையாடிய திரு.அருணாச்சலம் அவர்கள் நம்மவரின் கொள்கையையும், சிறப்பையும் எடுத்துக்கூறினார்மக்கள் நீதி மய்யம்