சென்னை : ஜனவரி 26, 2௦23

நமது சுதந்திர இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு A.G. மௌரியா அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி விழாவிற்கு தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்திய பெருநாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் மக்கள் நீதி மய்யம். இன்று காலை 10.30 மணியளவில், கட்சி தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு A.G.மௌரியா அவர்கள் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்தார். மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மய்ய உறவுகள் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. – மக்கள் நீதி மய்யம்

தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின நாள் விழாவினை ஒட்டி தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்து அப்பகுதியை மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.