சென்னை : 03 பிப்ரவரி 2024

புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 04, 2024

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2024 மக்கள் நீதி மய்யம் போட்டியிட ஆயத்தமாகி வருவதை தொடர்ந்து கடந்த மாதம் இரண்டு நாட்கள் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிர்வாகிகள் பங்குகொண்ட கலந்தாலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின்னர் தலைவர் அவர்கள் ஆலோசனைகள் மேற்கொண்ட பின் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டார். அலுவல் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டிய காரணத்திற்காக தேர்தல் பணிகளை செய்துமுடிக்க தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கிவிட்டு வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.

அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்திற்குண்டான கலந்தாலோசனை கூட்டம் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள சென்னை போரூர் அருகில் காரம்பாக்கம் எனுமிடத்தில் உள்ள ஸ்ரீ அங்கு மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

“நாடாளுமன்ற தேர்தல்பணிகள் சென்னை, காஞ்சிபுரம் மண்டல கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது”.மக்கள் நீதி மய்யம்

#KamalHaasan #MakkalNeedhiMaiam