புது தில்லி : பிப்ரவரி ௦1, 2௦23
மத்தியில் ஆளும் பிஜேபி அரசு பாராளுமன்றத்தில் நிதியாண்டு 2023-2024 ஆண்டுக்கான (காகிதம் இல்லா டிஜிட்டல் அறிக்கை) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நமதி இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் மாண்புமிகு குடியரசுத்தலைவர், மாண்புமிகு பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு சபைகளின் உறுப்பினர்கள் அமர்ந்திருக்க தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கம் போல பல விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனி நபர் வருமானம் மீதான வருமான வரிவிதிப்பு வரம்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது இவை தவிர்த்து பல சர்ச்சைகளை எதிர்தரப்பு முன்வைத்து வருகிறார்கள். இதனைப்பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வெற்று பெருமை பேசும் நிதிநிலை அறிக்கையாகவே காணப்படுகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
“கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை.
நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை.
சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது.” – திரு கமல்ஹாசன் – தலைவர் : மக்கள் நீதி மய்யம்
கடந்த 2௦22 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றிய தலைவரின் கருத்து