சென்னை : பிப்ரவரி ௦3, 2௦23

தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்கள் வெகு சிலரே அவர்களில் முக்கியமான ஓரிடம் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நமது தமிழ்நாடு எனும் பெயரை அரசாணை வெளியிட்டு நீண்ட கனவினை நிஜமாக்கி வைத்தவர்.

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ள புகழஞ்சலி.

தமிழ் வளர்ச்சி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பேரறிஞர் அண்ணா. ஆதிக்கத்திற்கு எதிரான போரில் நம்மை வழிநடத்தும் குரல் அவருடையது. அரசியல் மாண்பும், அடிபணியா வீரமும் கொண்ட தலைவரின் நினைவுகளைப் போற்றுவோம். – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு A.G.மௌரியா அவர்களின் செய்திக்குறிப்பு