கோவை : மார்ச் 22, 2௦23
சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்தது.
அதன் பின்னர் தடாலென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5௦ கூடுதலாக உயர்த்தியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமையின் மீது சுமையாக அடுக்கடுக்காக வைத்துக் கொண்டே செல்லும் மத்திய ஆளும் பிஜேபி அரசு உஜ்வாலா திட்டம் என அனைவர்க்கும் புகையில்லா எரிவாயு அடுப்பு கிடைக்கப் பெற வேண்டும் என்று இன்னும் ஓர் சிக்கலை பொதுமக்களுக்கு தந்தது கூடுதல் துயரம். இந்த திட்டத்தின் கீழாக சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கப்பெற்றவர்கள் தடாலடியாக உயர்த்தப்பட்டுக் கொண்டே வரும் விலையால் இரண்டாவது சிலிண்டர் பெறாமல் கிடப்பில் போட்டுவிட்டு பெரும்பாலானோர் மீண்டும் பழையபடிக்கு விறகுகள் எரித்து சமையலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆன்லைன் விளையாட்டில் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிவரும் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக மத்திய அரசு தனது மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் பாங்கு மிகவும் கொடுமை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் மெத்தனப் போக்கினை கடைப்பிடித்து பின்னர் ரம்மி ஆன்லைன் விளையாட்டு தடைச்சட்டம் கொண்டுவர மசோதா இயற்றப்பட்டது. பின்னர் தடைச்சட்டத்தினை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்து தடைச்சட்டத்தினை ரத்து செய்து மீண்டும் ஆன்லைன் ரம்மியை விளையாடும்படி செயலியை இயங்கச் செய்தனர். மீண்டும் தன் ராட்சச கைகளினால் பல மனிதர்களை எந்ததவித தயவு தாட்சண்யமின்றி அவர்களின் உயிர்களை பலி கொண்டது அவ்விளையாட்டு.
பின்னர் 2௦21 ஆம் ஆண்டில் திமுக வின் அரசு ஆட்சியைப் பிடிக்க மீண்டும் சிறிது காலத்திற்கு பிறகு ஆன்லைன் ரம்மியைத் தடை செய்து அவசர கால தடைச்சட்டம் அமல்படுத்தியது. எனினும் அது 6 வார காலமே நீடிக்க முடியும் என்பதை கருத்தில்கொண்டு நிரந்தர தடைச்சட்டம் கொண்டுவர வேண்டி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை கடந்த 2௦22 ஆம் வருடம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. ஆனால் ஆளுநர் அதனை கிடப்பில் போட்டுவிட்டு நீண்டகாலம் கழித்து பல கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார். அவருடைய கேள்விகள் மற்றும் கோரப்பட்ட விளக்கங்களுக்கு முறையான பதில்களும் தகுந்த ஆதாரங்களும் தமிழக அரசின் சார்பில் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாத ஆளுநரின் மெத்தனப்போக்கு மீண்டும் பல உயிர்களை பலிகொண்டுவருகிறது. பொதுமக்களில் சிலரும் எச்சரிக்கைகளை மீறி ஆன்லைன் ரம்மியில் விளையாடி தங்களது பணம் மற்றும் உயிரையும் இழப்பது வேதனைக்குரியது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டு செயலியை மீண்டும் நிரந்தரமாக தடைசெய்வது மீண்டும் தமது உயிர் மற்றும் உடமைகளை இழப்பதை நிச்சயம் தடுக்க முடியும் என்பதை உணர்த்தவே களத்தில் இறங்கியது மக்கள் நீதி மய்யம்.
சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தியது மற்றும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை நிரந்தரமாக ஒழித்திட வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆளும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர் கோவை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். இந்நிகழ்வுக்கு மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.