மார்ச் 11, 2௦23

கிட்டத்தட்ட சிறு பிள்ளையாக இருந்த போதிருந்தே தமிழ்த்திரையுலகில் நடிக்கத் துவங்கி இன்றுவரை ஓர் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கி வருகிறார் நம்மவர் & உலகநாயகன் என பெரும் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் திரு கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் தனது இரண்டு பொறுப்புகளைப் பற்றி தெளிவான ஓர் பார்வையை முன்வைத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

சுமார் 40 ஆண்டுகாலமாக தான் நடித்துவரும் படங்களுக்கு அது தமிழ் மட்டுமல்லாமல் எந்த மொழிப் படமாக இருப்பினும் தனது சம்பளமாக பெற்றுக் கொள்ளும் தொகை எதுவாக இருந்தாலும் அதனை ரொக்கப் பணமாக வாங்குவதில்லை என்பதை அசைக்க முடியாத கொள்கையாகவே வைத்து உள்ளார். அதாவது வங்கிப் பரிமாற்றம் மூலம் மட்டுமே சம்பளத்தினைப் பெற்றுக் கொள்கிறார். மேலும் அவ்வாறு சம்பாதித்த பணத்தினை வருமானவரித்துறையில் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்து அதில் செலுத்தவேண்டிய வருமானவரியை தவறாமல் அரசுக்கு செலுத்திவருகிறார்.

அவரது நேர்மையான இச்செயலை பாராட்டிய வருமானவரித்துறை Mr Clean & White எனும் பொருள்படும்படி சிறந்த வருமானவரி செலுத்துபவர் என்று பாராட்டு பட்டயமும் விளம்பர தூதுவராகவும் இயங்கும் பொறுப்பினையும் வகித்தது இன்னும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில் அரசியலில் ஈடுபடும் நேரமும் காலமும் உண்டானதால் மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியை துவக்கி அதனை மிக முக்கிய கட்சியாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நடத்தி வருகிறார். இதற்கிடையில் சில நேரங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்மையான எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை சகித்துக் கொள்ள முடியாத பலர் நடிப்பு அரசியல் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்துவருகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைகிறார்கள் என்பதை கிரகித்துக் கொண்ட தலைவர் அவர்கள் மேலே தெளிவுபடச் சொன்னதே சினிமா என்னுடைய தொழில் நான் எனது வாழ்வை தொடர்ந்து நடத்திக்கொள்ள என் சம்பாத்தியம் மட்டுமே அவசியம். என்னுடைய தேவைகளை நான் எவரிடமும் இனாமாக கேட்டுப் பெறுவதோ அல்லது அன்பளிப்பாகவும் பெறுவதோ என்னுடைய இயலாமையை காட்டிவிடும் ஆக அவ்வாறு என்னால் அடுத்தவர் தயவில் இயங்க என் மனம் ஒருநாளும் ஒப்புக் கொள்ளாது ஆனால் அதே சமையம் கட்சியையும் பிறர் உழைப்பினால் வரும் பணத்தில் நடத்திட மாட்டேன். கட்டாயம் செய்து வசூலும் செய்திட இப்போதும் ஒப்புகொள்ளாத என் மனம். எனவே எனது சம்பாத்தியத்தில் மட்டுமே அரசியலில் மற்றும் சினிமாவில் இயங்குவேன்.

மக்களுக்கு நல்லது செய்திட வேண்டும் என்பதே என் நெடுநாளைய கனவு எனக்கு சினிமாவின் மூலமாக மிகப்பெரிய வாழ்க்கையை தந்த எம் மக்களுக்கு சேவை செய்திட வேண்டும் எனும் எண்ணத்தில் இருக்கும் எனக்கு மக்களாகிய நீங்கள் அரசு பொறுப்பை அளிப்பீர்கள் எனில் உயிர்மூச்சாக நினைக்கும் சினிமாவை விட்டுவிடுவேன் அரசியலுக்கு இன்னும் அதிக நேரம் ஈடுபடுவேன் என்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.