சென்னை : மார்ச் 12, 2௦23

நான் இன்ன சாதியில் பிறந்தேன், அதை மாற்ற முடியாது ஆனால் அதை என்னுள் புகுத்திக் கொள்வதை எனக்கு நினைவு தெரிந்தது முதலும் பகுத்தறிந்து தெளிந்தது முதலும் என என்னையும் என்னிடமிருந்து சாதி, மதம், உயர்வு தாழ்வு பார்க்கும் எந்த பிரிவினையையும் பாகுபாடையும் முற்றிலுமாக ஒதுக்கி வைத்தேன்

அதை பல இடங்களில் கிடைத்த மேடைகளில் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறேன். ஆயினும் என்னை மீண்டும் மீண்டும் அதே குழிக்குள் தள்ளப் பார்க்கிறார்கள். அதில் எப்போதும் விழப் போவதில்லை. அந்த ஒற்றை வெள்ளை நூலை தவிர்த்து நின்றேன் அதற்குப் பதிலாக இந்த கற்றை நூலை தரித்து நிற்கிறேன். தேச ஒற்றுமையையும் பிணைக்கும் இந்த கற்றை நூல் தான் வெள்ளையரை பொட்டலம் கட்டிய நூலை கட்சிக்கப்பாற்பட்டு ஏற்றுக் கொண்டார் நம் தலைவர்.

பின்குறிப்பு : காணொளியில் திரு கமல்ஹாசன் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து தொகுக்கப்பட்டதே மேற்கண்ட கட்டுரை பத்தி