சென்னை : மார்ச் ௦2, 2௦23

ஆதன் இணையதள யூ டியூப் சேனல் சமீபத்தில் அரசியல் விமரிசகர் சவுக்கு சங்கர் பங்களிப்பில் அவரை ஆதரிப்போர் ஒன்று கூடிய நிகழ்வொன்று நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட ஒருவர் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களையும் அவரின் அரசியல் நகர்வுகளையும் விமரிசனம் செய்தவர் முன் வைத்த கருத்தொன்று பலரையும் கவனிக்க வைத்தது. மற்ற அரசியல் தலைவர்களை போலல்லாமல் கமல்ஹாசன் அவர்கள் படம் நடிக்க போய் விடுகிறார் முழு நேர அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற கருத்தினை வைத்தார்.

இதற்கு முன்னதாக இது போன்ற பலரின் கருத்துக்களை எதிர்கொண்ட நம்மவர் வேறொரு சந்தர்ப்பத்தில் மேடையில் தான் பேசும்போது தமிழ் நாட்டின் முன்னோடியான தந்தை பெரியார் அவர்கள் பற்றிய கருத்தொன்றை பொதுமக்களுக்கு சொன்னது நினைவுக்கு வரவே மய்யத்தமிழர்கள் You Tube Channel வாயிலாக பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளியை நீங்கள் கீழ் காணும் தரவின் மூலமாக காணலாம்.