சென்னை : மார்ச் 04, 2023

ஈரோடு கிழக்கில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திரு EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.

கடந்த மாதம் 27 ஆம் தேதியன்று நடந்து முடிந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெறுவார் என கணிப்புகள் வெளியானது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு இளங்கோவன் அவர்கள் வென்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

இவ்வெற்றியை குறித்து திரு கமல்ஹாசன் அவர்கள் தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தேர்தல் பரப்புரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை முன்னின்று செய்த மய்யம் தேர்தல் குழுவிற்கும் அதன் நிர்வாகிகள் மற்றும் சொந்தங்களான உறுப்பினர்கள் அனைவர்க்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் EVKS இளங்கோவன் அவர்களுக்கும்,தோழமைக் கட்சிகளுக்கும், தேசம் காக்க என்னோடு கைகோர்த்த ம.நீ.ம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்