சென்னை : ஏப்ரல் 13, 2௦23

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் நீதியின் மேலும் நேர்மையின்பாலும் அசையா பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் அவரது ஆலோசணையின்படி நமது இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியன்று (14.04.2023) கட்சியின் சார்பில் நம்மவர் இலவச சட்ட உதவி முகாம் துவங்கவிருப்பதாக மாநில செயலாளர் திரு S.B.அர்ஜூனர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்மவர் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் ஆணைப்படி, ஏப்ரல் 14 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியும் சட்டமேதையுமான டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்தநாளில் நமது மக்கள் நீதி மய்யத்தின், நம்மவர் இலவச சட்ட உதவி முகாம் தமது பணிகளை சிறப்பாக தொடங்க இருக்கிறது.

முதற்கட்டமாக டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நம்மவர் இலவச சட்ட உதவி முகாமின் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது. அனைவரையும் பணிவுடன் வரவேற்கிறேன். திரு S.B.அர்ஜூனர்