சென்னை ஏப்ரல் 14, 2023

இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின்படி மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. துணைத்தலைவர் திருA.G.மௌரியா, பொதுச்செயலாளர் திரு அருணாசலம், மாநில செயலாளர்கள் திரு செந்தில் ஆறுமுகம் மற்றும் திரு SB அர்ஜூனர் ஆகியோர் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை காந்திலால் ஜெயின் திருமண மண்டபத்தில் 2௦ வழக்கறிஞர்கள் ஆலோசனைகள் வழங்கிட இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் அப்போலோ மருத்துவமனையின் 25 மருத்துவர்களுடன் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் சுமார் 500 கலந்து கொண்டு பயன்பெற்றனர். இவை மட்டுமல்லாது தமிழ்ப்புத்தாண்டு முன்னிட்டு 2௦௦ மாணவ மாணவிகளுக்கு லஞ்ச பாக்ஸ் வழங்கப்பட்டது.